ஊழல் பணம், லஞ்ச பணம், தவறான வழியில் சேகரித்த பணத்தை பதுக்கும் இடமாக துபாய் மாறியுள்ளதாகா டியூப் தமிழ் இணையதளம் பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக தனது குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய் சென்று இருந்தார். தமிழகத்திற்கு, தேவையான முதலீடுகளை கொண்டு வருவதற்காக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, பிரபல வார பத்திரிக்கையான ஜீனியர் விகடன், துபாய்க்குச் சென்ற 5,000 கோடி அமைச்சர்களை கண்காணிக்கும் ராஜ்பவன் என்று பகீர் செய்தியினை வெளியிட்டு இருந்தது. இச்செய்தி, தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது
அந்தவகையில், ஆளும் கட்சியை கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது, ஜீனியர் விகடனில் வந்த செய்தியை மேற்கோள்காட்டி 5,000 கோடி ரூபாய் பணம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, தி.மு.க மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான, ஆர்.எஸ்.பாரதி தமிழக பா.ஜ.க தலைவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சிப்பதா? அண்ணாமலை உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில், 100 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று வக்கீல்நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதற்கு பதிலடியாக அண்ணாமலை, 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தி.மு.க கட்சி என் மீது மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும் அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தி.மு.க.வின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான என் போராட்டம் தொடரும் துணிவுடன் மக்கள் துணையுடன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அந்தவகையில், தமிழக முதல்வரின் துபாய் பயணம் குறித்து இன்று வரை பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இப்படிபட்ட சூழலில், டியூப் தமிழ் இணையதள ஊடகம் துபாய் பற்றி கூறியதாவது;
துபாய்க்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என டென்மார்க் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. இதற்கு, முக்கிய காரணமாக கூறுவது என்னவெனில் திருடிய பணம், வரி மோசடி செய்த பணம், ஊழல் பணம், கருப்பு பணம் மற்றும் லஞ்ச பணத்தை முதலீடு செய்யும் ஒரு கடைசி இடமாக துபாய் மாறியுள்ளதாக மேற்கூறிய நாடுகள் குற்றம் சுமத்தி இருக்கின்றன. இதுதவிர, பொருளாதார குற்றவாளிகள், போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களின் பணம், வரிக்கு டிமிக்கி கொடுத்தவர்களின் பணம் என அனைத்தும் பதுக்கும் சொர்க்கபுரியாக துபாய் மாறியுள்ளது. ஆகவே, அந்நாட்டை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருப்பதாக இக்காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான, கூடுதல் தகவல்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.