குறட்டை விட்டு தூங்கும் பூனை: வடிவேலு ஸ்டைலில் கலாய்ப்பு!

குறட்டை விட்டு தூங்கும் பூனை: வடிவேலு ஸ்டைலில் கலாய்ப்பு!

Share it if you like it

பூனை ஒன்று மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டு குறட்டை விட்டு தூங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வடிவேலுவின் டயலாக்களை மீம்ஸ்களாக போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

நமது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இருக்காது. நம்மிடம் நெருக்கமாகப் பழகும் செல்லப் பிராணிகள் நம்மைப் போலவோ அல்லது நமது வீட்டில் இருக்கும் குழந்தைகளைப் போலவோ இமிடேட் செய்ய முயற்சித்து குறும்பு செய்வது வழக்கம். இவை பெரும் நாம் ரசித்து சிரிக்கும் வகையில் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதுபோன்ற சேட்டைகளை அந்த செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதும், இதைப் பார்த்துவிட்ட நெட்டிசன்கள் கமென்ட் செய்து வைரலாக்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில், தனது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான பூனை செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார் ஒரு பயனர். அந்த வீடியோக்களில் மேற்கண்ட பூனை குறட்டை விட்டு தூங்குவதுபோல இருக்கிறது. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பூனைக்கு அதன் உரிமையாளர் மீன் வடிவலான தலையணையும், நல்ல பஞ்சு மெத்தையையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். மதியம் நன்றாக சாப்பிட்ட களைப்போ என்னவோ, அந்த மெத்தையில் மட்ட மல்லாக்கப் படுத்து தூங்குகிறது அந்தப் பூனை. இதில், குறட்டை வேறு விடுகிறது அந்தப் பூனை.

இந்த வீடியோவை லட்சக்கணக்கான நெட்டிசன்கள் ‘ரீ ட்விட்’ செய்துவருவதோடு, தங்களது கமென்ட்களையும் பதிவு செய்து வருகிறார்கள். இவற்றில் பெரும்பாலும் காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் டயலாக்கள்தான். ஒரு நெட்டிசனோ, ‘இன்னும் ஏன்டா முழிச்சிருக்க, தூங்குடா கைப்புள்ள’ என்றும், மற்றொரு நெட்டிசனோ, ‘மல்லாக்க படுத்து விட்டத்தப் பார்த்து தூங்குறதுல என்னவொரு சுகம்’ என்றும் பதிவிட்டிருக்கிறார்கள். மேலும் பலரும், ‘எங்களது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இப்படித்தான் தூங்குவார்கள்’ என்றும் பதிவிட்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ, தங்களது நண்பர்களை டேக் செய்து கிண்டல் அடித்திருக்கிறார்கள். இந்த வீடியோவை இதுவரை 3 லட்சம் பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள். சுமார் 1 லட்சம் பேர் ரீ ட்விட் செய்திருக்கிறார்கள்.

நீங்களும் தட்டி விடுங்கள்!


Share it if you like it