யோகாவின் வகைகள் அதன் பயன்கள் – ( பகுதி-04 )

யோகாவின் வகைகள் அதன் பயன்கள் – ( பகுதி-04 )

Share it if you like it

யோகாவின் வகைகள் அதன் பயன்கள்

நமது புண்ய பூமி பாரதத்தில் அனைத்து விதமான பொக்கிஷங்கள் உள்ளன. இந்த பொக்கிஷங்கள் உலகிலுள்ள அனைத்து விதமான மக்களுக்கும் பயன்படும் வகையில் நமது முன்னோர்கள் நமக்காக அள்ளிக்கொடுத்து சென்றுள்ளார்கள். அவைகளை நாம் முறையாக கையாண்டு வாழவில் வளம் பெற வேண்டும் என்பதே நமது முன்னோர்களின் நோக்கமாகும். நமது அகத்தோற்றத்திலும், புறத்தோற்றத்திலும் பொலிவும், பிரகாசமும் பெற நமக்கு யோகாசனம் என்ற பெரும் பொக்கஷத்தை நமக்கு வழங்கியுள்ளார்கள். இந்த பொக்கிஷமான யோகாவின் வகைகள் அதன் பயன்கள் இப்போது பார்ப்போம்.

யோகாவின் வகைகள்

இதற்கு முன் பகுதியில் கூறியது போல யோகவை 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
1. கர்மயோகம் பலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவை
2. பக்தியோகம் இறைவனிடத்தில் தன்னை முழுமையாக அர்ப்பனித்தல்
3. ஞானயோகம் பூரண அறிவுடன் செயலாற்றுதல்
4. இராஜயோகம் யோகங்களின் முதன்மையானது, ஓரிடத்தில் அமர்ந்து செய்யப்படும் தியானம்
5. ஹடயோகம் உடலை பலவகை இருக்கைகளுக்கு உட்படுத்தி மனதை பண்படுத்துதல்

இதை தவிர மற்ற இரண்டு யோகமான மந்திரயோக, கீதாயோக ஆகும்.

1. மந்திரயோகா மந்திர ஜபத்தால் சக்தியை கொடுத்தல்
2. கீதா யோகா இறைவனை நினைத்து உருகி பஜனையால் ஆராதனை செய்தல் ஆகும்.

இந்த வகையான யோக பயிற்சிகளை முறையாக பயின்றால் இறை நிலை அடையலாம். பல விதமான யோக முறையில் ஹடயோகம் என்பதே யோகாசனம் எனப்படும். ஆக யோக என்பதில் ஒரு சிறு பகுதியை யோகாசனம் ஆகும்.

அஷ்டாங்க யோகம் (இராஜ யோகம்)
அஷ்ட என்றால் எட்டு என்று பொருள். அஷ்டங்கா யோகங்களைப் பற்றி முன் பதிவில் தெரிவித்திருந்தேன்.

1. யமா
2. நியமா
3. ஆசனா
4. பிராணயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி

இவைகளே அஷ்டாங்க யோகம் பதஞ்சலி யோகவின் எட்டு நிலைகள் ஆகும்.
(திருமூலர் திருமந்திரத்தில் பாடலில் 10 பா. 542)
“இயம நியமமே எண்ணிலா ஆசனம்
நயமுற பிராணாயாமம் பிரத்தியாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே”
யோகிகளுக்கும் தவம் செய்வோருக்கும் மட்டுமல்லாது இல்லாத்தாருக்கும் இந்த யோக நெறிகள் மிகவும் பயன்படும். இந்த அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகளாக கொள்ளப்படுகிறது என்று இந்தப் பாடலின் வாயிலாக திருமூலர் கூறியுள்ளார்.
இந்த அஷ்டாங்க யோகத்தைப்பற்றி தன்னுடைய குறளில் திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த எட்டு யோக நிலையில் உள்ள ஒவ்வொரு யோக நிலைக்கும் குறள் எழுதியுள்ளார் திருவள்ளுவர்.

உதாரணம்
“தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது”
இக்குறளின் விள்ளமாவது உறுதிபாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள் தவத்தை மேற்கொள்வது வீண் செயலாகும். இந்த கட்டுபாடு, உறுதி வர முறையான யோக பயிற்சியின் மூலம் பெறலாம் என்பதே இக்குறளின் விளக்கமாகும்.

யோகசனத்தின் பயன்கள்

ஹடயோகம் தான் யோகசானம். இதனை முறையாக பயற்சி செய்தால் மற்ற யோக நிலைகளான கர்ம, பக்தி, ஞான, ராஜ யோகத்தை அடைந்து இறை நிலையை அடையலாம். யோகாசனத்தில் பல பயிற்சி நிலைகள் உள்ளன. அவற்றில் 10 யோகசான முறையை பார்ப்போம்.

1. உத்தித ஹஸ்த பாதாங்குஸ்தானம்
இந்த ஆசனம் செய்வதன் மூலம் கால்கள் மற்றும் கணுக்கால் பகுதிகள் பலபடுத்த செய்கிறது.

2. சசகங்காசனம்

இந்த ஆசனம் கைகள், தோள்கள் மற்றும் மேல் முதுகில் பலப்படுத்த உதவுகிறது. இதனை வழக்கமாக செய்தால் முதுகெலும்பு சிக்கல்களை தணிக்க முடியும்.

3. சர்வங்காசனம்

இந்த ஆசனம் தைராய்டு பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். மேலும் இதயத்தில் எந்தவித அழுத்தம் இல்லாமல் இரத்த ஓட்டத்தை சீராக கொடுக்க உதவும்.

4. வீரபத்ராசனம்

இந்த ஆசனம் கவனம், சமநிலை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும் உடலில் நல்ல சுழற்சி மற்றும் சுவாசத்தை ஊக்கவிக்க செய்து உடல் முழுவதும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.

5. மகரசனா

இந்த ஆசனம் ஆஸ்துமா, முழங்கால் வலி மற்றும் நுரையீரல் தொடர்பான அனைத்து பிரச்சனையும் குணப்படுத்த உதவுகிறது.

6. உத்தன்படசனா

இது உடலில் உள்ள செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. கணையம் மற்றும் நீரிழவு நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் நல்லது.

7. தடாசனா

இதனை செய்தால் தொடை, முழங்கால், கணுக்கால் பகுதிகளை பலப்படுத்துகிறது. மேலும் இடுப்பு, கால், பாதங்கள் வலிமை பெறுகிறது.

8. திரிக்கோனசனா

இந்த ஆசனம் அஜீரண பகுதியை குணப்படுத்தும் மேலும் இடுப்பு மற்றும் தொடைகளிலுள்ள கொழுப்புகளை நீக்கிவிடும்.

9. பாலசனா

இந்த ஆசனம் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் மனஅழுத்தம் உடல் சோர்வு குறைந்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

10. புஜங்கசனா

இந்த ஆசனம் செய்வதன் மூலம் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யும் ஆற்றல் வாய்ந்தது. இந்த ஆசனத்தை தினமும் செய்துவந்தால் மன அழுத்தம், சோர்வு அகற்றி புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

இதுபோன்று பல யோகாசன முறைகள் உள்ளன. இந்த பதிவில் ஒரு சில யோகாசன முறைகள் தான் தெரிவித்திருக்கிறேன். மேலும் யோகாசன முறைகள் தெரிந்துகொள்ள முறையாக யோகவினை கற்று பயிற்சி மேற்கொண்டால்தான் நமது உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்.

நமது முன்னோர்கள் நமக்கு வழங்கியுள்ள இந்த பொக்கிஷத்தை நாம் முறையாக கற்று நமது சந்ததியினருக்கும், உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே நம் பிறந்த நாடான புண்ணிய பூமி பாரதத்திற்கு நாம் ஆற்றும் மிக பெரிய கடமையாகும்.


Share it if you like it