உச்சாப்போன_ஓராண்டு : செந்தில் பாலாஜியை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !

உச்சாப்போன_ஓராண்டு : செந்தில் பாலாஜியை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !

Share it if you like it

கடந்த 2011-2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக, 1 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகிய மூவரும் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரில், செந்தில் பாலாஜி அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி வழக்கை முடித்து வைத்தது.

உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தால் மட்டுமே சமரசம்” ஏற்பட முடியும். சமரசம் ஏற்பட்டதால் பணம் கைமாறியது உறுதியாகிறது. அதனால், மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது முதல் தற்போது வரை ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். செந்தில் பாலாஜி கைதாகி இன்றுடன் 1 ஆண்டு முடிகிறது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலும் சமூக வலைத்தளமான எக்ஸ் இல் #உச்சாப்போன_ஓராண்டு என்கிற ஹாஷ்டாக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *