மனநல மருத்துவர் ஷாலினி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதியை பிராய்லர் கோழி என்று கூறியிருப்பது அக்கட்சியினர் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. இளைஞரணி செயலாளராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், கடந்த டிச.,14 – ஆம் தேதி இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட உதயநிதிக்கு ஒருபுறம் வாழ்த்துக்கள் குவிந்தாலும், மறுபுறம் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், மனநல மருத்துவர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகதன்மை கொண்டவர் ஷாலினி. இவர், ‘தி டிபெட்’ எனும் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் ;
நான் எந்த கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறேன் என்றால், பொதுமக்களுக்கு எது நன்மை. இயற்கையாகவே, உருவாகிய தலைவராக இருக்க வேண்டும். அவர், மண்ணின் மைந்தராக இருக்க வேண்டும். அது, பெண் தலைவராக கூட இருக்கலாம். லகான் கோழிக்கும், காட்டு கோழிக்கும் சண்டை வைத்தால் எது வெற்றி பெறும். காட்டு கோழிதான் வெற்றி பெறும். சிறுவயதில், இருந்தே உணவு ஊட்டி வளர்த்த கோழியை இது நல்லா ஓடுங்க, நல்லா சண்டை செய்யுங்க, என்று கூறினால் யாராவது நம்புவார்களா? இங்குதான், பிரச்சனையே எழுகிறது. அந்த கோழி இயற்கையான சூழலில் வளர்க்கப்படவே இல்லையே என உதயநிதி ஸ்டாலினையும், வாரிசு அரசியலையும் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.