கஞ்சா விற்பனை: உதயநிதி நற்பணி மன்ற நகர செயலாளர் கைது!

கஞ்சா விற்பனை: உதயநிதி நற்பணி மன்ற நகர செயலாளர் கைது!

Share it if you like it

கஞ்சா விற்பனை செய்ததாக தி.மு.க.வை சேர்ந்த சேப்பாக்க எம்.எல்.ஏ உதயநிதி நற்பணி மன்ற நகர செயலாளர் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை பல்லாவரத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக உதயநிதி நற்பணி மன்ற நகர செயலாளர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில், காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பல்லாவாரம் துரைபாக்கம் சாலை அருகே உள்ள முட்புதரில் பதுங்கி இருந்த அர்ஜீனன் என்பவனை பிடித்து விசாரித்த பொழுது அவன் கஞ்சா விற்பனை செய்பவன் என்பதை காவல்துறையினர் உறுதிபடுத்தினர்.

இதையடுத்து, அவன் கொடுத்த தகவல் அடிப்படையில் பல்லாவரத்தில் இருந்த தினேஷை காவல்துறையினர் தொடர்பு கொண்டனர். அந்தவகையில், 100 கிராம் பாக்கெட் கொண்ட ஒரு கிலோ கஞ்சா உடன் அங்கு வந்த தினேஷை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, காவல்நிலையம் அழைத்து சென்று அவனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், உதயநிதி நற்பணி மன்ற நகர செயலாளராக தினேஷ் இருந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு கஞ்சா வியாபாரியான அருணனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்தான செய்தியினை பிரபல ஊடகமான நியூஸ்18 வெளியிட்டுள்ளது அதன் லிங்க் இதோ.


Share it if you like it