உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்தில் கொங்கு மக்கள் இழிவுபடுத்தப்பட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 9 இடங்களில் அ.தி.மு.க.வும் ஒரு இடத்தில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்று இருந்தது. தி.மு.க.விற்கு பூஜ்ஜியத்தை மட்டுமே கோவை மக்கள் வழங்கி இருந்தனர். இதையடுத்து, கோவை மக்கள் மீது தி.மு.க.விற்கு கடும் அதிருப்தி இருந்து வந்தது. அந்தவகையில், கோவை மக்களை அவ்வபொழுது, உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கிண்டல் செய்து வந்தார்.
இதனிடையே, நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அம்மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்ய பொது கூட்ட நிகழ்ச்சியில் உதயநிதி பேசியதாவது; இனி நான் மாதம் ஒருமுறை கோவை வருவேன். உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் வெற்றி பெற வைத்தால், மாதம் 10 நாள் கோவையிலேயே தங்கி உங்களுடன் பணியாற்றுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதுதவிர, அப்பப்ப ஏமாத்தவும் செஞ்சுடுவிங்க மீண்டும் எங்களை ஏமாத்திடாதீங்க என்று நக்கலடித்தவர் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியாக நடித்த திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தின், டிரைலெர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில், வரும் சில சம்பவங்கள் கோவை மக்களையும், கவுண்டர் சமூகத்தையும் புண்படுத்துவது போல உள்ளது என பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை மண்ணை கவ்வ வைத்த கோவை மக்களை நெஞ்சுக்கு நீதியின் திரைப்படம் மூலம் உதயநிதி பழிவாங்கி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.