தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். “நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி என்கிற ரகசியம் எங்களுக்கு நன்கு தெரியும், என்று தி.மு.க-வின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் தமிழக மக்களுக்கு முன்பு வாக்குறுதி அளித்திருந்தார்.
கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும் என்று முந்தைய அ.தி.மு.க அரசு குறித்து மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதை நன்கு உணர்ந்த பட்டத்து இளவரசர். தி.மு.க அரசு நியமனம் செய்த நீதிபதி ஜயாவிடம் மனு கொடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
இந்நிலையில் நீட் தேர்விற்கு தயாராகிக் கொண்டு இருக்கும் மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய குழப்பதையும், கலக்கத்தையும், உருவாக்கும் விதமாக உதயநிதி மாணவர்களுக்கு தவறான பாதையை காட்டும் விதமாக இக்காணொளியில் பேசுவது மக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் அம்பலம்.. ஓய்வு பெற்ற நீதிபதியிடம் மனுவுடன் மன்றாடிய பரிதாபம்!
நீட் தேர்வை ரத்து செய்ய மக்கள் போராட்டம் நடத்த வேண்டும். – உதயநிதி அருமையான யோசனை.
திமுக அரசியலுக்காக தூண்டிவிட்டு- ஒரு மாணவி தற்கொலை, பின் அதையும் தன் அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்தியது. இப்போது இன்னொரு போராட்டம் மக்கள் நடத்துங்க?
மீடியா எங்கப்பா?
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) July 10, 2021