இன்பநிதிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்துள்ளதாக அவரது தந்தை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது, அரசியல் பிரவேசத்திற்கான முன்னோட்டம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க ஒன்றும் சங்கரமடம் அல்ல வாரிசு அரசியலுக்கு நாங்கள் எதிரி என்பது போல் தி.மு.க-வின் மறைந்த முன்னாள் தலைவர் கலைஞர் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து, ”என் குடும்பத்தில் இருந்து எனது மகனோ, மருமகனோ, யாரும் எனக்கு பிறகு அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று தனது தந்தையை போன்று ஸ்டாலின் கூறியிருந்தார். அதன் பிறகு, தற்போது தமிழகத்தில் என்ன? நடந்து வருகிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர்.
இதனிடையே, பிரபல இணையதள ஊடகமான விகடன், உதயநிதி ஸ்டாலினிடம் சமீபத்தில் நேர்காணல் நடத்தியது. அப்போது, இன்பநிதியின் எதிர்காலம் குறித்து நெறியாளர் கேட்டார். அதற்கு, உதயநிதி கூறியதாவது ;
லண்டனில் படிக்க என் மகன் சென்று இருக்கிறான். சினிமாவில், நடிக்க வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு தற்போது வந்துள்ளது. ஒருமுறை என்னிடம் கேட்டார் நானும் படத்தில் நடிக்கட்டுமா? என்று அதற்கு நானும் சரி என்றேன். அப்படி என்றால், என்னை வைத்து படம் எடு என்று கேட்டார். முதலில் எப்படி? நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டு வா என்று அறிவுரை வழங்கினேன். தீவிர அரசியலுக்கு அவர் வருவாரா என்று எனக்கு தெரியாது. அவரை, நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அதற்கு, என்று ஒரு வயது உள்ளது. தாத்தா முதல்வர் அப்பா ஒரு எம்.எல்.ஏ. என்ற புரிதல் மட்டுமே அவருக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.
சூரிய குடும்பத்தை சேர்ந்தவர் ஒருவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டம் தான் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.