தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி எல்லாம் ஒரு தலைவரா என வேலு பிரபாகரன் காட்டமான முறையில் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
சேப்பாக்க சேகுவேரா என்று தி.மு.க.வினரால் அன்புடன் அழைக்கப்படுபவர் உதயநிதி ஸ்டாலின். இவர், தமிழக முதல்வர் ஸ்டாலினை காட்டிலும் அதிகாரமிக்க தலைவராக பார்க்கப்படுகிறார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, தமிழக அமைச்சர்கள் அனைவரும் இவருக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருவதன் மூலம் இவரது செல்வாக்கினை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாள் விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடினர்.
இதையடுத்து, சென்னை மெரினாவில் உள்ள தனது தாத்தா நினைவிடத்திற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, அவர் திரும்பி வருகையில் அவரது வழியில் செருப்பு ஒன்று கிடந்து இருக்கிறது. இதனை கண்டு, அமைச்சர் சேகர்பாபு கடும் அதிர்ச்சியடைந்தார். அந்த செருப்பினை தனது காலால் ஒரம் தள்ளி விடாமல், அதனை தனது கைகளால் எடுத்து அப்புறப்படுத்திய அற்புதமான காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.
இந்த துயரங்கள் ஒருபுறம் இருக்க, தமிழக சட்ட சபையை உதயநிதியின் தலைமை ரசிகர் மன்றமாக தமிழக அமைச்சர்கள் மாற்றி இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. அதற்கு, கீழ்ண்ட காணொளிகளே சிறந்த உதாரணம் என்று கூறலாம்.
இப்படிப்பட்ட சூழலில் தான், திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணியின் நெருங்கி கூட்டாளியும் திரைப்பட நடிகருமாக இருப்பவர் வேலு பிரபாகரன். இவர், ரெட் பிக்ஸ் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், உதயநிதி ஸ்டாலினை வறுத்தெடுத்துள்ளார். இதுகுறித்தான, கூடுதல் தகவல்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



