காமராஜர், பசும்பொன், கக்கன், போன்ற மூத்த முன்னோடிகள் மக்களின் பிரச்சனைகளை தங்களுடையதாக நினைத்து, மக்களுக்கு தேவையான பணிகளை திறம்பட செய்து அனைவரிடம் நற்பெயரை பெற்ற புனித இடமாக சட்டமன்றம் இருந்தது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு சட்டமன்றம் தற்பொழுது கேலி கூத்தான மன்றமாக மாறி வருது மக்கள் மத்தியில் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்.
மக்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து பேச வேண்டிய அமைச்சர்கள் உதயநிதியையும், தமிழக முதல்வரையும், சட்டசபையில் புகழ்ந்து பேசி தங்களின் பொன்னான நேரத்தை வீணடித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்காததால் போர் அடிக்கிறது என்று உதயநிதி பேசி இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்று துடிக்கும் நல்லவர்களை தோற்கடித்தால் உதயநிதி போன்ற நபர்கள் தான் நம்மை ஆள துடிப்பார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.