கனிமொழிக்கு ஏற்கனவே திமுகவின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்ட அனுபவம் உண்டு. அதன் காரணமாக தேசிய அரசியலில் இருக்கும் அறிமுகங்கள் அனைத்தையும் தனது வளர்ச்சிக்காகவும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது நிலையை உயர்த்திக் கொள்ளவும் கடந்த காலங்களில் போல் திமுக மத்திய அரசில் கூட்டணி வகிக்கும் படியான கூட்டணி அரசு அமைக்கும் பட்சத்தில் ஒரு வலுவான மத்திய அமைச்சராக பொறுப்போடு வலம் வருவதற்கு தேவையான வலுவான அடித்தளத்தை கனிமொழி திட்டமிட்டு கட்டமைப்பதாக கட்சிக்காரர்கள் சிலாகிக்கிறார்கள். இதன் மூலம் திமுகவின் தேசிய அரசியல் முகம் என்றால் அது கனிமொழி தான். மேலும் ஒரு வலுவான அரசியல் ஆளுமையாக வலம் வரும் பட்சத்தில் குடும்ப ரீதியாக கட்சியில் தனக்கு இருக்கும் குழிப்பறிப்பு வேலைகள் முதல் அரசியல் அரங்கில் தன் மீது இருக்கும் எதிர்மறை விமர்சனங்கள் வழக்குகள் ஊழல் குற்றச்சாட்டுகள் என்று அனைத்தையும் எதிர்கொள்வதற்கு அது பெரும் ஆதரவாக இருக்கும் என்று அவர் கணக்கு போடுவதாக தெரிகிறது . கருணாநிதி இருந்த காலம் வரையில் எவ்வளவு குற்றச்சாட்டுகள் எதிர்மறை விமர்சனங்கள் ஊழல் வழக்குகள் இருந்தபோதிலும் கனிமொழி அதற்கெல்லாம் அஞ்ச வேண்டிய அவசியம் இருந்திருக்காது. காரணம் தனது தந்தையார் இருக்கிறார். எதுவானாலும் அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அவர் இருந்திருக்கலாம்.
ஆனால் கருணாநிதியின் காலத்திலேயே கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் பல மாதங்கள் இருந்தது கருணாநிதி தரப்பையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது . அதன் பிறகு தான் கணக்கென்று ஒரு அரசியல் அடையாளம் அங்கீகாரம் தேவை என்ற நிலையில் கனிமொழியும் அவரது தாயாருஞ பெரும் பிரயத்தனம் செய்து கனிமொழி நேரடி அரசியலுக்கு முழு நேர அரசியல்வாதியாக களம் இறக்கப்பட்டார். இன்று தனது தந்தையாரும் இல்லாத நிலை உடன்பிறந்த சகோதரரான அழகிரி தரப்பையே தனக்கு போட்டியாக இருக்கக் கூடாது என்று முழுமையாக கட்சியிலிருந்து அப்புறப்படுத்திய ஸ்டாலினின் அதிகார வெறி என் நேரமும் தன்னையும் தன் பதவியையும் பலி வாங்கக் கூடும் என்ற சுதாரிப்பும் நிச்சயம் கனிமொழிக்கு இருக்கக்கூடும். அப்படிப்பட்ட துரதிருஷ்டமான சம்பவங்கள் நேரிடும் பட்சத்தில் கட்சியில் தனக்கென்று ஒரு பெரும் ஆதரவு வட்டத்தையும் ஸ்டாலின் தரப்புக்கு இணையாக கட்சியில் தனக்கான இடத்தையும் தக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடாக கூட இந்த மகளிர் மாநாடு இருக்கலாம் .
எது எப்படி இருந்தாலும் தனது பெரும் பொருளாதாரம் தனிப்பட்ட முறையில் நேரம் செலவிட்டு பெரும் முனைப்போடு இந்த மகளிர் உரிமை மாநாட்டை சென்னையில் மூன்று நாள் அமர்வாக கனிமொழி தரப்பு நடத்தி முடித்து இருக்கிறது. பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்ட எந்த ஒரு சட்ட சிக்கலும் எழாத வண்ணம் திட்டமிட்டபடி நேர்த்தியாக இந்த மகளிர் உரிமை மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்து தன்னால் எடுத்த வேலையை அழகான திட்டமிடலில் சரியாக செய்து முடிக்க முடியும் அதற்கான ஆளுமை தன்னிடம் இருக்கிறது என்பதை கட்சியின் நிர்வாகிகளுக்கும் ஐயன்டிஐஏ கூட்டணிக்கும் காங்கிரஸின் தலைமைக்கும் ஒருசேர கனிமொழி சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இதன் மூலம் கட்சியிலும் கூட்டணி கட்சிகள் மத்தியிலும் தலைமை கட்சியான காங்கிரஸிலும் தனக்கான ஒரு இடத்தை அவர் தேடிக் கொண்டார்.
அகமதாபாத் ஸ்டேடியத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷமிட்டவதை தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணியின் கோஷம் ரசிகர்களின் கோஷம் என்று தான் எல்லோரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் மாநாடு முடிந்த கையோடு அதை சங்கிகளின் கோஷம் என்று ஒரு கட்சி ரீதியாக அரசியல் சாயம் பூசி அதற்கும் மத ரீதியான வன்மமான கருத்துக்களை பரப்பி பாஜகவை எதிர்க்கிறேன் என்ற பெயரில் மீண்டும் இந்து துவேஷ அரசியலை உதயநிதி ஆரம்பித்து வைத்திருக்கிறார். மகளிர் உரிமை மாநாட்டில் அவர் தொடங்கி வைத்த சர்ச்சைகள் இனி வரும் நாட்களில் நாடு முழுவதும் பெரும் விமர்சனங்கள் எதிர்ப்புகள் கண்டனங்களை ஏற்படுத்தக் கூடும். அது மீண்டும் முழுக்க முழுக்க அரசியல் அரங்கம் உதயநிதியையும் ஸ்டாலினையும் சுற்றியே சுழலும் வகையில் இருக்கும். தான் இவ்வளவு பிரயத்தனம் செய்து ஒரு மேடையை கட்டமைத்து அதன் மூலம் திமுகவிற்கு ஒரு நேர்மறை கருத்தியலையும் தனக்கு திமுகவிலும் ஐஎன்டிஐஏ கூட்டணியிலும் ஒரு ஆளுமை அங்கீகாரத்தையும் வென்றெடுக்க வேண்டும் என்று தான் கனிமொழி பிரயத்தனம் செய்து இந்த மகளிர் மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறார்.
ஆனால் சொல்லி வைத்தார் போல அந்த மேடையிலும் கனிமொழியை பின்னுக்கு தள்ளி கட்சியின் பெயர் எதிர்மறை பிம்பம் என்று எப்படி இருந்தாலும் பரவாயில்லை. பேசுபொருள் தானாக மட்டுமே இருக்க வேண்டும் .அது எதிர்மறை பேச்சாக இருந்தாலும் பரவாயில்லை என்ற ரீதியில் தனது இந்து துவேஷ அரசியலை மீண்டும் உதயநிதி முன்னெடுத்ததும் தன்னுடைய முயற்சிகள் எல்லாம் தவிடு பொடி ஆனதும் கனிமொழியை நிலைகுலைய வைத்திருக்கிறது. இதை ஸ்டாலின் தரப்பு கண்டிக்காமல் அவர்களும் முழு மூச்சோடு உதயநிதியோடு இணையாக இறங்கி வேலை செய்வது ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து தன்னை கட்டம் கட்டவும் அல்லது தன்னை அடுத்த கட்டத்திற்கு வளர விடாமல் அப்படியே மட்டுப்படுத்தி வைக்கும் விவகாரமாகவே கனிமொழி தரப்பு பார்க்கக்கூடும். அது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியிலும் மேல் மட்டத்திலும் பெரும் விவாதங்களை முடிவெடுக்க வேண்டிய கட்டாயங்களை ஏற்படுத்தக் கூடும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளே கவலையில் இருப்பதாகத் தெரிகிறது.
அசுர பலத்துடன் கூடிய பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த வெற்றிகளால் நாடு முழுவதும் அவர்களுக்கு பெருகிவரும் ஆதரவான அலை இதையெல்லாம் எதிர்கொண்டு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம்? அதில் வெற்றி பெற்று எப்படி ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம்? என்று யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கும்போது அதில் ஒரு அங்கமாக இருக்கும் திமுக கூட்டணி கட்சிகளையும் அதன் வெற்றி வாய்ப்புகளைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி தன்னை முன்னிறுத்திக் கொள்வதும் சனாதன ஒழிப்பு என்னும் தங்களது சித்தாந்த ரீதியான இந்து துவேஷ அரசியலை முன்னிறுத்துவது மட்டுமே கவனமாக இருப்பது ஐஎன்டிஐஏ கூட்டணி கட்சிகள் காங்கிரசின் தலைமை குடும்பம் மட்டுமின்றி திமுகவில் இருக்கும் மேல்மட்ட தலைவர்கள் இரண்டாம் கட்ட தலைவர்களையே கடும் அதிருப்திக்கும் எதிர்ப்புக்கும் ஆளாக்கி வருகிறது. இது எதிர்வரும் காலங்களில் வெளிப்படையான மோதலாக கூட வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவிற்கு வந்த செந்தில் பாலாஜிக்கு கட்சிக்கு வரும்போது மாவட்ட செயலாளர் பதவி அடுத்தடுத்த முன்னிலைப்படுத்துதல் என்று கட்சியின் தலைமை குடும்பம் கொடுத்த முன்னுரிமை மூத்த நிர்வாகிகள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது செந்தில் பாலாஜியின் அசுரத்தனமான வளர்ச்சியும் அவரின் அராஜக போக்கும் திமுக விற்கு பெரும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் கொங்கு மண்டலத்தில் ஏற்படுத்திக் கொடுத்தது ஆனால் தனது சொந்த ஆதாயம் கருதி தலைமை குடும்பம் இதனை கட்டுப்படுத்தாமல் விட்டது அதன் விளைவு தான் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் அதன் மூலமாக அரசியல் எதிர்ப்புகள் இன்று அவரை படுகுழியில் தள்ளி இருப்பதும் அவரின் மூலமாகவே திமுகவிற்கும் பெரும் அச்சுறுத்தல் காத்திருப்பதும் திமுகவின் மூத்த தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கட்சியை காப்பாற்றும் வழியை யோசிக்காமல் தொடர்ச்சியாக தனது மகனை மட்டுமே முன் நிறுத்துவதில் குறியாக இருக்கும் ஸ்டாலின் தரப்பு மீது மூட்ட நிர்வாகிகள் அதிருப்தியாக இருக்கிறார்கள் இதன் பலன் இன்று அவர்கள் அவர்களையும் அவர்களையும் கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலின் தரப்பை கை கழுவி கனிமொழியை ஆதரிக்க தயாராகி வருகிறார்கள்.