ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற சமயத்தில் தமக்கு தாமே வாழ்க கோஷம் எழுப்பிய உதயநிதியின் செயல் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.
ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிலையங்களில் ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களுக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே நிதர்சனம். உண்மை இவ்வாறு இருக்க, ஹிந்தி மொழியை தமிழகத்தில் திணிக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொள்வதாக தி.மு.க. வி.சி.க. நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையின் கீழ், தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஹிந்தி மொழிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த, ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தி.மு.க.வின் முன்னோடிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த, கண்டன ஆர்ப்பாட்டத்தில் இவ்வாறு கோஷம் எழுப்பபட்டன;
பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், கழக தளபதி ஸ்டாலினும், கற்று தந்த அறவழியில், இளைஞர் அணி செயலாளர் எங்கள் அண்ணன் உதயநிதியின் வீரம் மிக்க தலைமையில் ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம் என்று கோஷம் எழுப்பினர். இதில், வேடிக்கை என்னவென்றால், உதயநிதி ஸ்டாலின் தனக்கு தானே வாழ்க கோஷம் எழுப்பிய சம்பவம் தான் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது.