ஓமலூர் பேருந்து நிலையத்தில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து 7 ஏப்ரல் 2024 அன்று ஓமலூரில் பிரச்சாரம் செய்தபோது, திமுக மக்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து சாதனை படைத்ததாக மாபெரும் உருட்டினை உருட்டினார். அந்த உருட்டில் சேலம் மக்களே கதிகலங்கி போய்விட்டார்கள். அப்படி ஒரு உருட்டினை உருட்டியிருந்தார்,உதயநிதி.
உதயநிதி பேசுகையில், “இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைப் பார்த்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கனடா என்று ஒரு நாடு உள்ளது, இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பணக்கார நாடுகளில் ஒன்றாகும், கனடா. அந்த நாட்டின் பிரதமரின் பெயர் திரு.ஜஸ்டின் ட்ரூடோ, நான்கு நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் பேட்டி அளிக்கிறார், அதில் என்ன சொல்கிறார்? இந்தியாவிலேயே, ‘தமிழகத்தில் முதல்வர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில், அதிக குழந்தைகள் பள்ளிக்கு வரும் வகையில், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தத் திட்டத்தை, தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் போல், அறிமுகப்படுத்த பட்டுள்ளதாகவும், இது தான் திராவிட மாதிரி அரசு என்றும் கூறினார். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளுக்கும், நமது தமிழக அரசு, திராவிட மாதிரி அரசு, நமது தமிழக முதல்வர் ஆகியோர் முன்னுதாரணமாக இருக்கிறது ” என்றார் உதயநிதி.
இவர் பேசும் இந்த காணொளியானது சமூக வலைதளத்தில் வைரலானது. தமிழக முதல்வர் ஸ்டாலினை குறித்து கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பேசியுள்ளாரா என்று ஜஸ்டின் வெளியிட்ட அறிக்கையில் பார்த்தபோது ஒருவரியில் கூட ஸ்டாலினை பற்றியும் தமிழகத்தை பற்றியும் சொல்லவில்லை. அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி நெட்டிசன்கள் பலர் நீங்கள் சொன்னதுபோல் இதில் ஸ்டாலினை பற்றி குறிப்பிடவில்லையே ? மக்களை பார்த்தால் உனக்கு முட்டாளாக தெரிகிறதா ? தேர்தலுக்காக எந்த பொய் வேண்டுமானாலும் சொல்லலாம் என்று எதை சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என பொய் பிரச்சாரத்தை செய்துள்ளார் உதயநிதி.
தேர்தலுக்கு வருவதற்கு முன்பு பல வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள். ஆனால் அதில் ஒன்றை கூட நிறைவேற்றுவதில்லை. இதனை எதிர்த்து கேள்வி கேட்டால் நாங்கள் தேதி சொன்னோமா என்று நக்கலாக கிண்டலடிக்கின்றனர்.