தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் சீரியல்களை தமிழக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்னறன. இந்த நிலையில், பூலித்தேவரின் வரலாற்றை வடநாட்டு ஊடகங்கள் பெருமையோடு ஒலிபரப்பி வருகிறது.
ஹிந்தியை படித்தால் பானிபூரி தான் விற்க வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். இதனிடையே, ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் கொண்ட டீ சர்ட்டை அணிந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதற்கு, ஆதரவாக, பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இதுதவிர, ஹிந்தி பேசும் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக தி.க. வி.சி.க. மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, சீரியல் எனும் பெயரில் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வழிபாட்டு முறைகள் தமிழகத்தில் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. அதே வேளையில், வடநாட்டு ஊடகங்கள் தமிழர்களின் பெருமைகளையும், மேன்மைகளையும் உயர்வாக கருதி போற்றி பாராட்டி வருகின்றன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய “பூலித்தேவரின் வரலாற்றை நேஷனல் தூர்தர்ஷன் ஹிந்தி மொழியில் சீரியலாக ஒலிபரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.