இந்திய -ரஷ்ய உறவை விமர்சித்த உக்ரைன் : இந்திய – ரஷ்யா உறவு என்பது தாய் சேய் உறவுபோல் பிரிக்க முடியாதது – நெட்டிசன்ஸ் பதிலடி !

இந்திய -ரஷ்ய உறவை விமர்சித்த உக்ரைன் : இந்திய – ரஷ்யா உறவு என்பது தாய் சேய் உறவுபோல் பிரிக்க முடியாதது – நெட்டிசன்ஸ் பதிலடி !

Share it if you like it

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்போது அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் மோடி- புதின் இடையேயான சந்திப்பு நடந்த நிலையில், இது தொடர்பான போட்டோக்களும் வெளியானது. இதற்கிடையே இந்தச் சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது ட்விட்டரில், “இன்று ரஷ்யா நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனில் 37 பேர் கொல்லப்பட்டனர்.. அவர்களில் மூன்று குழந்தைகள்.. இது தவிர 13 குழந்தைகள் உட்பட 170 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவின் ஏவுகணை உக்ரைனில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள புற்றுநோயாளிகளை இருந்த பிரிவைத் தாக்கியது. இதில் பலர் இடிபாடுகளில் புதைந்தனர்.

இந்த நேரத்தில் உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிகக் குற்றவாளியை மாஸ்கோவில் கட்டியணைப்பதைப் பார்க்கும் போது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி தோற்பதைப் போல ஒரு ஏமாற்றத்தைத் தருகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் நிலைப்பாடு: உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் எனப் பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதேநேரம் ரஷ்யாவுடன் நெருக்கமான நல்லுறவைக் கொண்ட இந்தியா இதில் நடுநிலை நிலைப்பாட்டை எடுப்பதாக அறிவித்தது. எந்த நாட்டிற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பிரதமர் மோடி: அதேநேரம் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதைப் பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ரஷ்யா அதிபர் புதினை சந்திக்கும் போதெல்லாம் போர் நிறுத்தம் குறித்து மோடி வலியுறுத்தியே வந்திருந்தார்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பந்தம் உக்ரைன் அதிபருக்கு தெரியாது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பந்தம் இன்றோ நேற்றோ உருவானது அல்ல.பல தசாப்தங்களுக்கு முன் ஆரம்பித்து பல தசாப்தங்களாக தொடரும் பந்தமாகும்.

இந்தியாவும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் UN , BRICS , G20 மற்றும் SCO உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறுவதை ரஷ்யா ஆதரிப்பதாக. கூடுதலாக, இந்தியா ஸ்தாபக உறுப்பினராக இருக்கும் பார்வையாளர் அந்தஸ்துடன் சார்க்கில் சேர ரஷ்யா ஆதரவு தெரிவித்தது.

பொதுவாக இந்தியா எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு ரஷ்யா ஆதரவு தெரிவிக்கும். ரஷ்யா எந்த முடிவு எடுத்தாலும் இந்தியா அதனை ஆதரிக்கும். இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் ராணுவ உபகரணங்கள் 68 சதவீதம் ரஷ்யாவிலிருந்து வந்தது.

-  முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் , இந்தியாவுடனான உறவுகள் பற்றி கூறியதாவது :-

இந்தியாவுடனான உறவுகள் எப்பொழுதும் இருந்து வருகின்றன, நமது நாட்டின் மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்கள் பரஸ்பர நட்பு உறவுகள் அனுதாபம் மற்றும் நம்பிக்கை மற்றும் திறந்த தன்மை ஆகியவற்றால் நிரப்பப்படுகின்றன. அவர்கள் ஒருபோதும் கருத்து வேறுபாடுகள் அல்லது மோதல்களால் மறைக்கப்படவில்லை என்பதை நாம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இந்த புரிதல் – இது உண்மையில் நம் மக்களின் பொதுவான பாரம்பரியம். இது நம் நாட்டிலும், ரஷ்யாவிலும், இந்தியாவிலும் மதிக்கப்படுகிறது. மேலும், நமது நாடுகளுக்கிடையேயான மிக நெருக்கமான, நெருங்கிய உறவுகளைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்.

-  முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் , ரஷ்யாவுடனான உறவுகள் பற்றி கூறியதாவது :-

ஒவ்வொரு ரஷ்யனின் இதயத்திலும் இந்தியா வாழ்கிறது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதேபோல், ரஷ்யாவும் நம் ஆன்மாக்களில் ஒரு தாயகமாக வாழ்கிறது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். வாழ்க நம் நட்பு!

பிரணாப் முகர்ஜி இந்திய ரஷ்ய உறவுப்பற்றி :-

இந்தியா-ரஷ்யா உறவு ஆழமான நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையில் ஒன்றாகும், இது நிலையற்ற அரசியல் போக்குகளால் பாதிக்கப்படாது. இந்தியாவின் வரலாற்றில் கடினமான தருணங்களில் ரஷ்யா வலிமையின் தூணாக இருந்தது. இந்த ஆதரவை இந்தியா எப்போதும் வழங்கும். அணுசக்தி மற்றும் ஹைட்ரோகார்பன் ஆகிய இரண்டிலும் ரஷ்யா நமது மிக முக்கியமான பாதுகாப்பு நண்பராகவும், நமது ஆற்றல் பாதுகாப்பிற்கான முக்கிய நண்பராகவும்உள்ளது.

1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல நாடுகள் சேர்ந்து இந்தியாவை அழிக்க முற்பட்டபோது தனியொரு நாடாக ரஷ்யா மட்டும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தது. இந்த உதவியை இந்தியா வாழ்நாள் முழுதும் மறக்காது.

சர்வதேச அரங்கில் ரஷ்யா எப்போதும் இந்தியாவை கைவிட்டதே இல்லை. இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா பலமுறை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், மேற்கத்திய நாடுகள் சில, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்த்தன. ஆனால் இந்தியாவோ வழக்கமாக வாங்கும் எண்ணெயை விட அதிகளவில் வாங்கியது.

நீண்டகாலமாகவே இந்தியா ரஷ்யா உறவானது வலுவாக இருந்து வருகின்றது. இது பாரம்பரிய நட்பாக இருந்து வருகின்றது. அது உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் இன்னும் வலுவடைந்துள்ளது. வணிக ரீதியாகவும் மேம்பட்டுள்ளது. இந்தியாவுக்கு, ஆரம்ப காலத்தில் இருந்தே ரஷ்யாவின் நட்பானது மிக அவசியமான ஒன்றாக இருந்து வருகின்றது.

இந்திய ரஷ்யா உறவு என்பது தாய் சேய் உறவு போல் பிரிக்க முடியாதது. இந்த உறவை எத்தனை உக்ரைன் வந்தாலும் எத்தனை அமெரிக்கா வந்தாலும் பிரிக்கமுடியாது என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் உக்ரைன் அதிபரை விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *