பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நுபுர் ஷர்மா. இவர், தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்தவகையில், இஸ்லாமியர் ஒருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, பேசிய அவர் சிவலிங்கம் குறித்து மிகவும் இழிவாக கருத்து தெரிவித்து இருக்கிறார். இதனால், கடும் சினம் கொண்ட நுபர் ஷர்மா குரானில் இருந்த கருத்துக்களை மேற்கோள் காட்டி பேசியிருந்தார். இதையடுத்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பிரிவினைவாதிகள் இவ்விவகாரத்தை பெரிய அளவில் பேசு பொருளாக மாற்றி இருந்தனர். அந்தவகையில், கத்தார், ஈரான், சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தன.
இதனிடையே, நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க்ரீட் வீல்டர்ஸ். “இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகள், இந்திய அரசியல்வாதி நுபுர் ஷர்மாவின் கருத்தை கேட்டு கொதித்து போய் இருப்பது அபத்தமாக உள்ளது. நுபுர் ஷர்மா உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார். முகமது நபி ஆயிஷாவை 6 வயதில் திருமணம் செய்து, 9 வயதில் அவருடன் முதல் உறவை மேற்கொண்டார். இதற்கு ஏன் இந்தியா மன்னிப்புக் கேட்க வேண்டும் என காட்டமான முறையில் கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட ஹிந்து மதத்தைச் சேர்ந்த டெய்லர் கன்னையா லால் என்பவரை, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் நேற்று காலை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படிபட்ட சூழலில் தான், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த மருத்துவ நிபுணரான உமேஷ் கோல்ஹே என்பவர் நுபுர் ஷரமாவுக்கு ஆதரவாக பதிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்கா கடந்த ஜூன் 21 அன்று இரவு தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருக்கும் சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. இச்சம்பவத்தில், தொடர்புடைய இதையடுத்து, அப்துல் (24), சோயிப் கான் (22), முடாசிர் அகமது ஷேக் இப்ராகிம் (22) மற்றும் ஷாருக் பதான் ஹிதாயத் கான் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்தான செய்தியினை Organiser Weekly வெளியிட்டு இருக்கிறது.