நீண்ட இழுப்பறிக்கு பிறகு ஒரு வழியாக விக்கிரவாண்டி மாநாட்டில் கொள்கையை அறிவித்தார் விஜய். அவரது பேச்சை வைத்து தான் தொடர்ந்து விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறன. ஆனால் அவரது பேச்சும் கொள்கை அறிவிப்பும் படு சொதப்பதலாக இருந்ததால் விஜயின் ஆதரவாளர்களே குழப்பி போய்யுள்ளனர். பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களின் படங்களை வைத்து ஆவேசமாக பேசினார்.ஆனால் முன்னுக்குப் பின் முரணாக கருத்துகளை தெரிவித்தார். பெரியாரைக் கொள்கை தலைவன் என்று கூறிவிட்டு அவரது கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்கவில்லை என முழக்கமிட்டர். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என கட்சிகளுக்கு ஆஃபர் விடுத்தார். இன்னும் தனது பலத்தையே நிருப்பிக்காமல் எப்படி ஆட்சியில் பங்கு என கேட்கின்றனர். தனி பெரும்பான்மையுடன் ஜெயிப்போம் ஆவேசமாக பேசிவிட்டு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என ஆஃபர் விடுத்தார்.ஒரு வழியாக ஆளும் கட்சி நேரடியாக பேசாமா, ஆளும் கட்சியை அடாக் செய்தார்.
வேறுவழியின்றி திராவிட மாடல் என்ற பெயரில் கொள்ளையடிகிறார் என விஜய் சாடிய போதிலும் உறுதியான கொள்கை அறிவிப்பும் தெளிவான பேச்சும் இல்லாத விஜயின் மாநாட்டு உரை அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படி இருந்தாலும் விஜயின் அடாக் திமுகவுகே சேதாரம் என கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்