மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது வயது 82. இவர் பாலிடெக்னிக்கில் டீச்சராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். குருமூர்த்திக்கு கல்வியின் மீது தீவிர ஈடுபாடு இருந்தது இதன் காரணமாக, 1964-ம் ஆண்டு முதல் முதல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதிநேர அஞ்சல்வழி பட்டயப் படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் படித்திருக்கிறார்.
இதுவரை ஆசிரியர் குருமூர்த்தி பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., என 24 பட்டங்களை பெற்றிருக்கிறார்கள். அதாவது பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டயப் படிப்புகளை முடித்த குருமூர்த்தி, பணி ஓய்வுக்கு பிறகு 12 பட்டப்படிப்புகளும் முடித்திருக்கிறார் குருமூர்த்தி. ஆசிரியர் குருமூர்த்தி கல்வி கற்பதற்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார். 24 பட்டங்களை முடித்த குருமூர்த்திக்கு 82 வயதில் இன்னொரு ஆசை வந்தது. அதுதான் 25 வது பட்டப்படிப்பு. 25-வது பட்டப்படிப்பாக எம்.ஏ., போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற படிப்பை தேர்வு செய்துள்ளார்.
மயிலாடுதுறையில் புதிதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு தான் எம்.ஏ., போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து அதற்கான பாடப்புத்தகங்களை பெறுவதற்காக போயிருக்கிறார் குருமூர்த்தி. வயதான ஒருவர் படிப்பதற்காக உற்சாகம் வந்ததை பார்த்து அலுவலக ஊழியர்கள் வியந்து போனார்கள்.இதை கேள்விப்பட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி, ஆசிரியர் குருமூர்த்தியை பாராட்டி கௌவரம் செய்தார்.