தேசிய தொழில்துறை தாழ்வார மேம்பாட்டுத் திட்டத்தின் (NICDP) கீழ் 28,602 கோடி மதிப்பீட்டில் 12 தொழில் நகரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது.
10 மாநிலங்களில் இந்த தொழில் நகர திட்டமானது செயல்படுத்தப்படுவதாக இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அவை :
➣ குர்பியா, உத்தரகாண்ட்
➣ ராஜ்புரா-பாட்டியாலா, பஞ்சாப்
➣ ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ், உத்தரபிரதேசம்
➣ கயா, பீகார்
➣ திகி, மகாராஷ்டிரா
➣ ஜோத்பூர்-பாலி, ராஜஸ்தான்
➣ ஓர்வகல் மற்றும் கொப்பர்த்தி, ஆந்திரப் பிரதேசம்
➣ ஜஹீராபாத், தெலுங்கானா
➣ பாலக்காடு, கேரளா
இதேபோல் ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 7 மாவட்டங்களில் ரயில்வே அமைச்சகத்தின் 3 திட்டங்களுக்கு ரூ.6,456 கோடி மதிப்பீட்டில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.