பிரதமர் மோடி இன்று ரூ.7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மஹாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலத்தில் தொடங்கி வைக்கிறார். அதில் நில்வாண்டே அணையின் இடது கரை கால்வாய் கட்டமைப்பை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மற்றும் ‘நமோ உழவர் மரியாதை நிதி’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் உத்தரகாண்ட் ஜாம்ராணி அணையை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
இதன் திட்ட மதிப்பீடு 2,584.10 கோடி கோடி ரூபாய். இதில் 1,557.18 கோடி ருபாய் மத்திய அரசு தருவதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் உத்தரகாண்டில் உள்ள நைனிதால்,உதாம்சிங் நகர் மாவட்டங்கள், மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர்,பரேலி ஆகிய மாவட்டங்களில் 57 ஆயிரம் ஹெக்டேர் கூடுதலாக நுண்ணீர் பாசன வசதி கிடைக்கும்.
14 மெகாவாட் புனல் மின்சார ஆலை மூலம் 63.4 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கும்.
42.70 மில்லியன் கனஅடி குடிநீர் ஹால்ட்வானி மற்றும் அதை சுத்தியுள்ள பகுதிகளுக்கு கிடைக்கும்.