தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகன், அண்மையில் மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்று கொண்டார். இதையடுத்து மக்கள் ஆசி யாத்திரை என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களைச் சந்திக்க முடிவு செய்தார். இந்நிகழ்ச்சி கோவையில் நேற்றை தினம் தொடங்கியது. இதற்காக கோவை முழுவதும் பா.ஜ.க சார்பில் முருகனுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டத்தில் கலந்து கொண்ட முருகன் மிக உருக்கமாக பேசியதாவது.
ஏழை அருந்ததியர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை யாரும் மத்திய அமைச்சராக்கியதில்லை. 75 ஆண்டுகளில் முதன்முறையாக, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, என்னை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக்கினார். எந்தக் கட்சியும் செய்யாததை பா.ஜ.க செய்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மாநிலத் தலைவராக்கியது பா.ஜ.க.
மக்களவை, மாநிலங்களவைகளில் உறுப்பினர் அல்லாத ஒருவரை அமைச்சராக்கி மோடி அழகு பார்த்திருக்கிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த 12 பேர், மலைவாழ் மக்கள் எட்டுப் பேர், ஓ.பி.சி-யில் 28 பேரை மத்திய அமைச்சர்களாகியுள்ளனர்.
இவர்களையெல்லாம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். நான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன். செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் (கண்ணீர் மல்கத் தெரிவித்தார்). ஆனால் என்னை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.பி-க்கள் எங்களை அறிமுகம் செய்து வைக்கக் கூடாது என்று கங்ணம் கட்டித் தடை செய்தனர். சமூகநீதியைப் போற்றிக் காக்கும் காவலன் மோடிதான் என்று குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Congress & DMK committed the sin of blocking PM @narendramodi ji from introducing 12 SC & 08 ST Well-Deserving Union Ministers like him in the Parliament upon which @Murugan_MoS got emotional with tears in his eyes during his #JanAshirwadYatra today. pic.twitter.com/vdzGT5AbgM
— Sunil Deodhar (@Sunil_Deodhar) August 16, 2021