ஹத்ராஸ் என்றால் பொங்குவார் : கள்ளக்குறிச்சி என்றால் பம்முவார் : திமுகவிற்கு சொம்படிக்கும் டைமண்ட்முத்து !

ஹத்ராஸ் என்றால் பொங்குவார் : கள்ளக்குறிச்சி என்றால் பம்முவார் : திமுகவிற்கு சொம்படிக்கும் டைமண்ட்முத்து !

Share it if you like it

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் அன்று (ஜூலை 02) ஆன்மீக கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவாளர் ‘போலே பாபா’ உரையாற்றினார்.

இவரின் உரையைக் கேட்க ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது, வெளியே செல்ல வழியின்றி கூட்ட நெரிசலில் சிக்கினர்.

இந்த நெரிசலில் சிக்கி நேற்று (ஜூலை 02) வரை குழந்தைகள், பெண்கள் என 121 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ‘X’ வலைதளப்பக்கத்தில், இச்சம்பவம் குறித்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அக்கவிதை பின்வருமாறு..

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நெரிசலில் இறந்துபோன அத்துணை உயிர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்

சடலங்களுக்கு மட்டுமல்ல சடங்குகளுக்கும் சேர்த்தே இரங்குகிறேன்

ஆன்மிகச் சொற்பொழிவாளரின் காலடி மண்ணைக் கவரவேண்டும் என்றுதான் ஒருவர் காலடியில் ஒருவர் செத்திருக்கிறார்கள்

இருதயக்கூடு நொறுங்குகிறது

மது போதைக்கும் மத போதைக்கும் உள்ளது பூவுக்கும் புஷ்பத்துக்கும் உள்ள வேறுபாடுதான்

கல்வி பொருளாதாரம் பகுத்தறிவு என்ற மூன்றிலும் மேம்படாத தேசம் இப்படித்தான் தவணை முறையில் இறந்துகொண்டிருக்கும்

‘இருப்பவர்கள் கண்களை இறப்பவர்கள் திறக்கிறார்கள்’ என்றோர் முதுமொழி உண்டு

இறந்தவர்கள் இருப்பவர்களுக்குப் பாடமாகிறார்கள்

படிப்போமா?

இவ்வாறாக கவிஞர் வைரமுத்து உத்தர பிரதேச அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இறந்தனர். இந்த சம்பவத்திற்கும் வைரமுத்து எக்ஸ் பதிவில் வழக்கமான கவிதை வடிவில் கருத்தை பதிவிட்டுள்ளார். அக்கவிதை பின்வருமாறு..

எந்தத் தேன் உணவானதோ
அதே தேனில் எறும்பும்

எந்தத் தண்ணீரில் மலரானதோ
அதே தண்ணீரில் தாமரையும்

எந்த நதியில் உயிர்கொண்டதோ
அதே நதியில் மீனினமும்

செத்து மிதப்பது
தெரிந்த பின்னும்

எந்த மது
மறக்கச்செய்கிறதோ
அதே மதுதான்
மரிக்கச்செய்கிறது என்பதனை
மறந்தனயே மனிதா!

நல்ல சாராயம்
குறைக்கப்பட வேண்டும்
கள்ளச் சாராயம்
ஒழிக்கப்பட வேண்டும்

இறப்பின் காரணம்
எதுவாயினும்
இரங்கத்தான் வேண்டும்
சாராயச்
சாவுகளுக்காகவல்ல;
சந்ததிகளுக்காக

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் உயிரிழந்தால் அந்த மாநில அரசை தாறுமாறாக விமர்சனம் செய்த வைரமுத்து கள்ளக்குறிச்சி சம்பவத்திற்காக ஏன் தமிழக அரசை விமர்சிக்கவில்லை. அதிலும் தமிழக அரசு என்ற பெயரையே பயன்படுத்தாமல் நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்
கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று திமுக அரசுக்கு முட்டு குடுக்கும் வைரமுத்துவை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *