8 வயது ஹிந்து சிறுமி பலாத்கார முயற்சி: ஏ.சி. மெக்கானிக் ஷாம் அகமது கைது!

8 வயது ஹிந்து சிறுமி பலாத்கார முயற்சி: ஏ.சி. மெக்கானிக் ஷாம் அகமது கைது!

Share it if you like it

ஏ.சி. மெக்கானிக் போல நடித்து 8 வயது ஹிந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஷாம் அகமதுவை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் நகரில் வசித்து வரும் ஹிந்து குடும்பத்தினர், தங்களது வீட்டிலிருந்த ஏ.சி.யை சரி செய்ய விரும்பினர். இதையடுத்து, ஏ.சி. சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து ஆட்களை அனுப்புமாறு கூறியிருக்கிறார்கள். அவர்களும் ஏ.சி. மெக்கானிக் ஒருவரை அனுப்பி இருக்கிறார்கள். ஹிந்து குடும்பத்தினர் வீட்டுக்கு வந்த அந்த நபர், தனது பெயர் ஷாம் என்று ஹிந்து பெயரை கூறியிருக்கிறார். பின்னர், அவரை ஏ.சி.யை சரி செய்யச் சொல்லி விட்டு, தங்களது வேலையை பார்த்திருக்கிறார்கள்.

இந்த சமயத்தில், அக்குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, ஏ.சி. சர்வீஸ் செய்வதை அருகில் சென்று பார்த்திருக்கிறார். அப்போது, ஏ.சி. மெக்கானிக் ஷாம், அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான். உடனே, அவனிடமிருந்து தப்பி அச்சிறுமி, பாத்ரூமுக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள். பின்னர், அச்சிறுமி கூச்சலிடவே, சத்தம் கேட்டு பெற்றோர் வந்து அச்சிறுமியை மீட்டிருக்கிறார்கள். இதன் பிறகு, ஏ.சி. மெக்கானிக்கை பிடித்து விசாரித்ததில், அவனது பெயர் ஷாம் அகமது என்பதும், அவனது தந்தை பெயர் குர்ஷித் அகமது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஷாம் அகமதுவை பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Share it if you like it