உத்தரப் பிரதேசத்தில் பார்வையற்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முகமது ஜாகித் என்பவனை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், அருகிலுள்ள பகுதிகளிலும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. கடந்த இரு மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. இதில், பல கொலைகளும் அடக்கும். கடந்த செப்டம்பர் மாதம் லக்கிம்பூரில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை, அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்கள் 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கழுத்தை நெறித்துக் கொலை செய்து, தூக்கில் தொங்க விட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதேபோல, கண்காட்சியைப் பார்க்கச் சென்ற பிராமண குடும்பத்தைச் சேர்ந்த மைனர் சிறுமியை, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர் கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். முயற்சி பலனளிக்காததால் அச்சிறுமியின் மீது கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், பார்வையற்ற சிறுமியை இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் போஜ்பூரைச் சேர்ந்தவன் முகமது ஜாகித். இவனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏழை தம்பதிக்கு ஒரு பார்வையற்ற மைனர் மகள் இருக்கிறார். இந்த சூழலில், பெற்றோர் வேலைக்குச் சென்று விட்ட நிலையில், அந்த பார்வையற்ற சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி, முகமது ஜாகித் அழைத்துச் சென்றிருக்கிறான். பின்னர், ஒரு மறைவான இடத்தில் வைத்து, அச்சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். இதன் பிறகு, அச்சிறுமியை அங்கேயே நிர்வாணமாக விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டான். மாலையில் பெற்றோர் வந்ததும் நடந்த விவரத்தை கூறியிருக்கிறார் அச்சிறுமி. இதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர் போஜ்பூர் காவல் நிலையித்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த முகமது ஜாகித்தை கைது செய்தனர். பார்வையற்ற மைனர் சிறுமி பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.