உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து பெண்ணை லவ்ஜிகாத் காதல் வலையில் வீழ்த்தி, மத மாற்றம் செய்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த அக்லீம் குரேஷி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் ஷாஹி காவல் நிலையப் பகுதியில் வசிப்பவர் நிஷா (பெயர் மாற்றம்). ஹிந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணான இவர், தனது வீட்டிலேயே அழகுக்கலை நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவரது அழகுக்கலை நிலையத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த அக்லீம் குரேஷி என்கிற இஸ்லாமிய இளைஞரின் சகோதரி தரன்னும், அவரது தோழி கஜாலா ஆகியோர் சிகை அலங்காரம், முகப்பொழிவு உள்ளிட்டவைகளுக்காக அடிக்கடி வந்து போயிருக்கிறார்கள். இதனால், அவர்களுடன் நிஷாவுக்கு நல்ல நட்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரையும் அழகுக்கலை நிலையத்துக்கு அழைத்து வந்த வகையில், அக்லீமுக்கு நிஷா மீது ஆசை ஏற்பட்டிருக்கிறது. இதை தனது சகோதரிகளிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, தனது சகோதரனின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்த தரன்னும், தங்களது வீட்டுக்கு ஒருநாள் வரும்படி நிஷாவை அழைத்திருக்கிறார்கள். நிஷாவும் சம்மதிக்க, ஒரு நாள் அக்லீம் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, நிஷாவுக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்துகொடுத்த தரன்னும், அவரது சகோதரி ஷபானாவும், அவரை அக்லீம் இருந்த அறைக்குள் வைத்து பூட்டி விட்டனர். பின்னர், மயக்கத்தில் இருந்த நிஷாவை, அக்லீம் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். இதை தரன்னும், ஷபானாவும் வீடியோ எடுத்திருக்கிறார்கள். பின்னர், அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, நிஷாவை கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சியை சாப்பிட வைத்திருக்கிறார்கள். மேலும், கட்டாய மத மாற்றம் செய்து அக்லீமுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
இதன் பிறகு, நிஷாவுக்கு மயக்க ஊசி செலுத்தி அவரிடமிருந்த பணம், நகை ஆகியவற்றை அக்லீமும் அவரது சகோதரிகளும் அபகரித்துக் கொண்டனர். பின்னர், நிஷாவை அலகாபாத், பனாரஸ், அக்பர்பூர், அஜ்மீர் மற்றும் பீகார் போன்ற இடங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற அக்லீம், பின்னர் ஆக்ராவுக்கு அழைத்து வந்திருக்கிறான். அங்கு, அக்லீமின் சகோதரர்களான ஷதால் மற்றும் விசால் ஆகியோர் நிஷாவை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இந்த சூழலில், எப்படியோ அக்லீமிடமிருந்து தப்பி ஊர் திரும்பிய நிஷா, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ஷாஹி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அக்லீம் உட்பட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.