ஹிந்து கோயில் உடைப்பு; சிலைகள் திருட்டு: ஷாருக் கும்பல் கைது!

ஹிந்து கோயில் உடைப்பு; சிலைகள் திருட்டு: ஷாருக் கும்பல் கைது!

Share it if you like it

ஹிந்து கோயில் பூட்டை உடைத்து சேதப்படுத்தி, சிலைகளை திருடிச் சென்ற ஷாருக், ரிஸ்வான் குரேஷி, இம்ரான் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், கோயிலும், கோயில் சிலைகளும் சேதப்படுத்தப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும், ஹிந்து கோயில்களுக்குள் இறைச்சித் துண்டுகளை வீச அவமதிப்பதும் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி, ஹிந்து கோயிலின் பூட்டை உடைத்து சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கோயிலை சேதப்படுத்தியதோடு, சிலைகளையும் திருடிச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் லோஹாமண்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட புல்சிங்கா மோடியில் ஸ்ரீ்சங்கட் மோகன் ஹனுமான் கோயில் அமைந்திருக்கிறது. சம்பவத்தன்று இக்கோயிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், கோயிலை சேதப்படுத்தியதோடு, கோயில் உண்டியலில் இருந்த பணம், மாகாளி அம்மன் சிலை, மணிகள், ஆரத்தி செய்ய பயன்படுத்தப்படும் விளக்கு (தியா), மின் மேளம் மற்றும் ஷேஷ்நாக் சிலை ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து கோயில் பூசாரி தருண் ஷர்மா, தர்மகர்த்தா ஹேமந்த் குமாரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர் போலீஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். அருகிலிருந்த சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை வைத்து ஆராய்ந்ததால், அதே பகுதியைச் சேர்ந்த ஷாருக், ரிஸ்வான் குரேஷி, இம்ரான் ஆகியோர் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே செல்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களையும் போலீஸார் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Share it if you like it