ஹிந்து வேடமணிந்து சுவாமி சிலைகள் உடைப்பு: தௌஃபீக் அகமது கைது!

ஹிந்து வேடமணிந்து சுவாமி சிலைகள் உடைப்பு: தௌஃபீக் அகமது கைது!

Share it if you like it

உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து போல் வேடமணிந்து, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டபடியே, கோயிலில் இருந்த சுவாமி சிலைகளை சேதப்படுத்திய தௌஃபீக் அகமது என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதியை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் சவுக் பகுதியில் கோமதி ஆற்றின் கரையில் லெதே ஹனுமான் மந்திர் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்குள் கடந்த 7-ம் தேதி புகுந்த மர்ம நபர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டபடியே, கையில் வைத்திருந்த கல்லால் அங்கிருந்த ஹனுமன் சிலை, சனி பகவான் சிலை ஆகியவற்றை சேதப்படுத்தி இருக்கிறார். மேலும், ஹனுமன் கையில் இருந்து காவிக் கொடியையும் கிழித்து எறிந்தார். அந்த நபர் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்திருந்ததோடு, மது போதையிலும் இருந்தார். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

அப்போது போலீஸார் நடத்திய விசாரணையில், தனது பெயர் சிவா என்று அவன் தெரிவித்திருக்கிறான். ஆனால், அவன் மதுபோதையில் இருந்ததால், அதற்கு மேல் போலீஸார் விசாரிக்கவில்லை. மறுநாள் காலையில் மதுபோதை தெளிந்த நிலையில், அவனிடம் போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது, தனது பெயர் தௌஃபீக் அகமது என்பதும், பஜார்கலா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பைராகி தோலாவின் ஹைதர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் தௌஃபீக் அகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து லக்னோ மேற்கு டி.சி.பி. எஸ்.சனப்பா கூறுகையில், “லக்னோவில் உள்ள ஹனுமான் கோயிலில் இருந்த 2 சிலைகளை தௌஃபீக் அகமது என்பவன் சேதப்படுத்தி இருக்கிறான். தகவலின் பேரில் அவன் உடனடியாக கைது செய்யப்பட்டான். குற்றவாளிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ பரிசோதனையில் அவன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஹிந்து அமைப்பினர் கோயிலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Share it if you like it