உத்தரப் பிரதேசத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டம் நிகாசன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் தமோலியாபுர்வா. இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முறையே 17, 15 வயதுடைய பட்டியல் சமூக சகோதரிகள். இருவரையும், கடந்த 14-ம் தேதி கடத்திச் சென்ற மர்ம நபர்கள், கரும்புத் தோட்டத்தில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தனர். மேலும், அதை மறைப்பதற்காக கழுத்தை நெறித்து கொலை செய்து, அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுச் சென்றனர். இது தொடர்பாக சுஹைல், ஜுனைத், கரிமுதீன், ஹபிசுல் ரஹ்மான், ஆரிப், சோட்டு ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்தின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில், அதே மாவட்டத்தில் மற்றொரு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
லக்கிம்பூர் கெரி மாவட்டம் பீரா கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்டது முசேபூர் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிறுமி, தனது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது, அதே கிராமத்தில் வசிக்கும் சலீமுதீன் என்கிற சலீம் மற்றும் ஆசிப் ஆகியோர் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். சிறுமி எதிர்ப்புத் தெரிவிக்கவே, இருவரும் சேர்ந்து கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் சிறுமியை தாக்கி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை, குடும்பத்தினர் மீட்டு பிஜுவா பகுதியில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சலீமுதீன், ஆசிப் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஹிந்து சிறுமிகளை குறிவைத்து, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, இதுபோன்ற குற்றங்களை தடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு, கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் வீடுகள், புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும், அடிப்படைவாதிகள் அடங்க மறுத்து அத்துமீறி வருகின்றனர். எனவே, பாலியல் குற்றவாளிகளுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.