உத்தரப் பிரதேசத்தில் லவ்ஜிகாத் மூலம் காதல் வலையில் வீழ்த்தி, மதம் மாறி திருமணம் செய்ய மறுத்ததால் 4-வது மாடியில் இருந்து ஹிந்து சிறுமியை கீழே தள்ளி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த முகமது சுபியானை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுப் பிடித்தனர்.
லவ்ஜிகாத் என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் ஹிந்து சிறுமிகளையும், இளம்பெண்களையும் காதல் வலையில் வீழ்த்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உ.பி. மாநிலம் இந்த லவ்ஜிகாத் அதிகளவில் அரங்கேறி வருகிறது. இப்படி மதம் மாற்றும் ஹிந்து பெண்களை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, பசுவின் இறைச்சியை உண்ணச் சொல்லி வற்புறுத்துவதும், இஸ்லாமிய மத முறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டமாயப்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதற்கு உடன்படாத ஹிந்து பெண்களை, குடும்பத்துடன் சேர்ந்து கொடுமைப்படுத்துவதும், சித்ரவதை செய்வதும், சமயத்தில் கொலை செய்வது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், உ.பி.யில் லவ்ஜிகாத் மூலம் காதல் வலையில் வீழ்த்தப்பட்ட ஹிந்து இளம்பெண், இஸ்லாமிய மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் 4-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் துபாக்கா காவல்நிலைய பகுதி பசந்த்குஞ்ச் செக்டர் எச் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி குப்தா. இவரது மகள் நிதி குப்தா. 19 வயது இளம்பெண்ணான இவர், அழகுக்கலை நிபுணராக பயிற்சி எடுத்து வந்தார். இந்த சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த முகமது சுபியான், லவ்ஜிகாத் மூலம் நிதி குப்தாவை தனது வலையில் வீழ்த்தி இருக்கிறான். பின்னர், நிதி குப்தாவை இஸ்லாமி மதத்துக்கு மாறி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிவந்திருக்கிறார். இதற்கு நிதி குப்தா சம்மதிக்கவில்லை.
இதனிடையே, இவர்களது காதல் விவகாரம் நிதி குப்தாவின் பெற்றோருக்குத் தெரியவரவே, இருவரையும் கண்டித்ததோடு, சுபியான் வீட்டிற்குச் சென்றும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே சச்சரவு இருந்து வருகிறது. எனவே, சுபியானுடன் பேசுவதை நிதி குப்தா தவிர்த்து வந்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த சுபியான், தாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த போட்டோ தன்னிடம் இருப்பதாகவும், மதம் மாறி தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், அந்த போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி வந்திருக்கிறான். எனினும், தனது முடிவில் உறுதியாக இருந்த நிதி குப்தா, சுபியானை தொடர்ந்து தவிர்த்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நிதி குப்தா தனது வீட்டில் தாய், சகோதரி, மாமா ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, நிதி குப்தாவின் வீட்டிற்கு வந்த சுபியான், இஸ்லாம் மதத்துக்கு மாறி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தி இருக்கிறான். இதனால் அப்செட்டான நிதி குப்தா வீட்டின் மொட்டை மாடியான 4-வது மாடிக்குச் சென்றிருக்கிறார். அப்போது, சுபியானும் நிதி குப்தாவை பின்தொடர்ந்து சென்றிருக்கிறான். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், சிறிது நேரத்தில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, 4-வது மாடியில் இருந்து நிதி குப்தாவை கீழே தள்ளிவிட்டு விட்டு, சுபியான் தப்பி ஓடி விட்டான். இதில் பலத்த காயமடைந்த நிதி குப்தாவை, அவரது குடும்பத்தினர் மீட்டு கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதையடுத்து, நிதி குப்தாவின் பெற்றோர் துபாக்கா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய முகமது சுபியானை தேடி வந்தனர். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தான். இந்த சூழலில், சுபியான் தனது குடும்பத்தினருடன் பதுங்கி இருக்கும் இடம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால், போலீஸார் வருவதைக் கண்ட சுபியான் அங்கிருந்து தப்பி ஓடினான். ஆனால், போலீஸார் விடாமல் விரட்டிச் சென்றனர். பின்னர், என்கவுன்ட்டர் மூலம் சுபியானை சுட்டுப் பிடித்தனர். இதில், காலில் குண்டுக் காயமடைந்த சுபியான் கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். ஹிந்து பெண்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்.