உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் இளைஞர்களால் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. வருங்கால கணவர் முன்பு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஷபீக், க்யூம், மாசிக் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் மௌயிமா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. இருவரும் நீண்ட நாட்களாக தொலைபேசியில் பேசி வந்த நிலையில், இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி, நேற்று தனது வருங்கால மனைவியின் ஊருக்கு வந்திருக்கிறார் அந்த வாலிபர். இருவரும் மௌயிமா அருகேயுள்ள சிசாய் சிபா பகுதியிலுள்ள ஒரு ஆற்றின் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த ஷபீக், க்யூம், மாசிக் ஆகியோர் அந்த வழியாக பைக்கில் வந்திருக்கிறார்கள்.
ஒரு பெண்ணும், ஒரு வாலிபரும் ஆற்றின் கரையில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மூவரும், பைக்கை நிறுத்தி விட்டு அந்த காதல் ஜோடியை நோக்கி வந்திருக்கிறார்கள். இதனால், பயந்துபோன காதல் ஜோடி அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்கள். ஆனால், மேற்படி மூவரும் சேர்ந்து அந்த ஜோடியை வழிமறித்திருக்கிறார்கள். பின்னர், அந்த இளம்பெண்ணை அவரது வருங்கால கணவர் முன்பே பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதைக் கண்ட அந்த வாலிபர், அக்கும்பலின் காலில் விழுந்து தனது வருங்கால மனைவியை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார். மேலும், அந்த இளம்பெண்ணும் தங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்று சொல்லி கதறி இருக்கிறார்.
ஆனால், இரக்கமே இல்லாத அந்த காமுக கூட்டம், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறது. இதை அக்கூட்டத்தில் இருந்த ஒருவன் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறான். பின்னர், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இந்த வீடியோ வைரலான நிலையில், ட்விட்டர் பயனர் ஒருவர் பிரயாக்ராஜ் மாவட்ட எஸ்.பி.யை டேக் செய்து அந்த வீடியோவை ரீட்விட் செய்ததோடு, ஆன்மூலம் புகாரும் அளித்தார். இந்த வீடியோவை பார்த்த போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, ஷபீக், க்யூம், மாசிக் ஆகியோர்தான் குற்றவாளிகள் என்பது அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, மௌயிமா போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேற்படி மூவரையும் கைது செய்தனர்.