இந்தியாவின் தேசிய பாடலை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவமதித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக, இந்தியாவைப் பொறுத்தவரை எந்த மாநிலங்களில் அரசு நிகழ்ச்சிகள் நடந்தாலும் ஆரம்பத்தில் தேசிய பாடலும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த இரு சமயங்களிலும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது மரபு. அந்த வகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு நிகழ்ச்சிகளில் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வந்தே மாதரமும், நிறைவாக தேசிய கீதமும் பாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், உ.பி. மாநிலம் முசாபர்நகர் நகராட்சியில் நடந்த கூட்டத்தில் தேசிய பாடலுக்கு அவமதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதாவது, முசாபர்நகர் நகராட்சி கூட்டம் சமீபத்தில் நடந்திருக்கிறது. இக்கூட்டம் தொடங்கியவுடன் தேசிய பாடலான வந்தேமாதரம் பாடப்பட்டிருக்கிறது. அப்போது, அரங்கிலிருந்த தலைவர், துணைத்தலைவர், ஆணையர் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் எழுந்து நிற்க, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த புர்கா அணிந்த 6 பெண்களும், 3 ஆண்களும் எழுந்து நிற்காமல் தேசிய பாடலை அவமதிப்பு செய்திருக்கிறார்கள். இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த கூட்டத்தில் மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சீவ் பல்யான், உத்தரப் பிரதேச அரசின் தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்தேவ் அகர்வால் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பதுதான்.
பின்னர், கூட்டம் தொடங்கியதும் தேசிய கீதம் மற்றும் தேசிய பாடலுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான் அறிவுறுத்தினார். ஒரு பெண் தேசிய பாடலை அவமதித்தால், சமூகத்தை எப்படி பலப்படுத்துவாள் என்று மத்திய அமைச்சர் கூறினார். இதர கவுன்சிலர்களும் இதுகுறித்து விவாதித்தனர். இதை கூட்டத்தில் கலந்துகொண்ட யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தேசிய பாடலை அவமதித்த நபர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இத்தனைக்கும் உ.பி.யில் உள்ள மதரஸாக்களில் தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அரசு நிகழ்ச்சியிலேயே தேசிய பாடலை அவமதிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், மதரஸாக்களில் எப்படி கடைப்பிடிப்பார்களோ என்கிற ரீதியில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.