உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5 வயது ஹிந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பிச் செல்ல முயன்ற ஷாநவாஸ் மிராஜ் ஷா என்பவனை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பால்கர் மாவட்டம் போய்சர் பகுதியில் வசிக்கும் ஹிந்து தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவன் 21 வயதான ஷாநவாஸ் மிராஜ் ஷா. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுமியை, சாக்லேட் தருவதாகக் கூறி தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றிருக்கிறான் ஷாநவாஸ். அங்கு அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். பின்னர், இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, அச்சிறுமியை அனுப்பி இருக்கிறான். இதனால், அச்சிறுமி வெளியில் யாரிடமும் சொல்லவில்லை.
இந்த நிலையில், மறுநாள் அக்குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிருக்கிறது. இதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு பரிசோதனை செய்தபோதுதான், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரம் தெரியவந்திருக்கிறது. இதன் பிறகு, விசாரித்தபோதுதான் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷாவாஸ் பாலியல் பலாத்காரம் செய்த விஷயத்தை அச்சிறுமி பயத்துடன் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, அச்சிறுமியின் பெற்றோர் போய்சர் போலீஸில் புகார் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஷாநவாஸை தேடிவந்தனர்.
இதையறிந்த ஷாநவாஸ் போய்சரில் இருந்து தப்பிச் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்திருக்கிறான். அப்போது, அவனை சுற்றி வளைத்துப் பிடித்த போலீஸார், ஷாநவாஸோ போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுமிகள், பெண்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளும், பெண்களும்தான் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களில் சிக்குவது பெரும்பாலும் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.