உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மற்றும் உன்னாவ் நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முகமது என்கிற வாலிபரை உ.பி. பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏ.டி.எஸ்.) நேர்று கைது செய்திருக்கிறது.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எப்போதெல்லாம் பிரச்னைகள் வருகிறதோ, அப்போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மற்றும் உன்னாவ் நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரும், பேராசிரியருமான நீலகந்த் பூஜாரிக்கு வாட்ஸ் ஆப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் உத்தரப் பிரதேச போலீஸார் லக்னோவின் மடியான் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.
அந்த புகாரில், “ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் சேரும்படி அழைப்பு விடுக்கும் இணைப்பு எனது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்தது. நானும் குழுவில் சேர்ந்தேன். உடனே, எனக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அலிகஞ்சில் சர்ஸ்வதி ஷிஷு மந்திர் பள்ளியில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்தப் போவதாக அந்த தகவல் கூறியது. அதோடு, கர்நாடகாவில் 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மிரட்டல் ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் இருந்தது” என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, மேற்படி விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீஸார், எந்த எண்ணில் இருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர், மெசேஜ் வந்த இடத்தை ட்ராக் செய்ததில், அது தமிழ்நாட்டை காட்டி இருக்கிறது. இதையடுத்து, தமிழ்நாடு போலீஸ் உதவியை நாடி இருக்கிறார்கள். அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜா முகமது என்பவரது எண்ணிலிருந்து மேற்கண்ட மிரட்டல் மெசேஜ் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் பிறகு, மேற்படி நபரான ராஜா முகமதுவை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, ராஜா முகமதுவை காவலில் எடுத்து, மேல் விசாரணைக்காக லக்னோவிற்கு அழைத்துச் செல்ல ஏ.டி.எஸ். போலீஸார் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஹிந்து நாடு என பிரகடனம் மற்றும் ஒரே சட்டம் மற்றும் தான் தீர்வு