மாஜி எம்.பி.க்கு ஆயுள் சிறை… கோர்ட் அதிரடி தீர்ப்பு!

மாஜி எம்.பி.க்கு ஆயுள் சிறை… கோர்ட் அதிரடி தீர்ப்பு!

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2006-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆள் கடத்தல் வழக்கில், பிரபல தாதா அதிக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது எம்.எல்.ஏ., எம்.பி.களின் வழக்கை விசாரிக்கும் பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தாதா அதிக் அகமது. சமாஜ்வாதி கட்சியில் இணைந்த இவர், 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். இவர் எம்.பி.யாக இருந்தபோது, அம்மாநிலத்தின் பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி.) எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜு பால் என்பவரை கடந்த 2005-ம் ஆண்டு கொலை செய்ததாக குற்றச்சாட்டு. தனது சகோதரர் அஷ்ரப் அசீமை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால்தான் ராஜு பாலை கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் நெருக்கடி காரணமாக கைது செய்யப்பட்ட அதிக் அகமது, தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

எனினும், சிறையில் இருந்து கொண்டே தனது அடியாட்கள் மூலம் அராஜக செயல்களை தொடர்ந்து வருகிறார். இந்த சூழலில், எம்.எல்.ஏ. ராஜு பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் என்பவரை கடந்த 2066-ம் ஆண்டு அதிக் அகமதுவின் ஆட்கள் கடத்திச் சென்றனர். (கடந்த பிப்ரவரி மாதம் இவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது). இக்கடத்தல் வழக்கு மற்றும் ராஜு பால் கொலை வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் பிரயாக்ராஜ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதில், கடத்தல் வழக்கில் சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக குஜராத் சிறையில் இருந்து அதிக் அகமதுவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிக் அகமது குற்றவாளி என்று அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அதிக் அகமது, அவரது கூட்டாளிகள் தினேஷ் பாசி, கான் சவுலத் ஹனீப் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it