லவ் ஜிகாத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிறுவனின் தலையை துண்டித்து கொலை செய்த அமைதி மார்க்கத்தைச் சேர்ந்த அடிப்படைவாதிகள் இருவரை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் சிவல்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் முடிதிருத்தும் தொழிலாளி. இவர் தனது மனைவி, 2 மகன்கள், 1 மகளுடன் வசித்து வருகிறார். மகள்தான் மூத்தவர். அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதேபகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த நதீம் என்பவன், லவ் ஜிகாத்தில் வீழ்த்துவதற்காக அச்சிறுமியை தினமும் பின்தொடர்ந்து வந்திருக்கிறான். இது அச்சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவரவே, நதீமை கண்டித்திருக்கிறார்கள். எனினும், நதீம் திருந்தவில்லை. பின்தொடர்வதை நிறுத்தவில்லை.
இதையடுத்து, அச்சிறுமியின் மூத்த சகோதரரான 14 வயது சிறுவன், நதீமை கண்டித்திருக்கிறான். மேலும், அச்சிறுமியை பள்ளிக்கு அனுப்பாமல் வேறு ஊரில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். கடந்த சில நாட்களாக சிறுமியை காணாததால் அச்சிறுமியின் வீட்டுக்கு தனது நண்பர்களுடன் வந்திருக்கிறான் நதீம். அச்சிறுமி எங்கிருக்கிறார் என்று அவரது தம்பியிடமும், தாயிடமும் கேட்டு மிரட்டி இருக்கிறான். ஆனால், அவர்கள் சொல்ல மறுத்து விட்டனர். இதனால், ஆத்திரமடைந்த நதீம், பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டான்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் அச்சிறுமியின் இளைய சகோதரரான 14 வயது சிறுவனை காணவில்லை. இதனால், அவரது பெற்றோர் பதட்டத்தில் இருந்து வந்தனர். இந்த சூழலில், மீரட்டின் புறநகர்ப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் அச்சிறுவன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், உடல் மட்டும் கிடப்பதை அப்பகுதி கிராமவாசி ஒருவர் பார்த்துவிட்டு, ஊர் மக்களிடம் தெரிவித்திருக்கிறார். பின்னர், இதுகுறித்து உள்ளூர்வாசிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, போலீஸாருடன் உள்ளூர்வாசிகளும் சேர்ந்து துண்டிக்கப்பட்ட தலையை வனப்பகுதியின் 5 கி.மீ. சுற்றளவில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடலுக்குப் பிறகு ஒருவழியாக சிறுவனின் தலை கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இக்கொடூர கொலையை அரங்கேற்றிய நதீம் மற்றும் அவரது நண்பன் ஃபர்மான் ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து கொலை செய்யப்பட்ட சிறுவனின் பெற்றோர் கூறுகையில், “நதீம் எங்களது மகளை பின்தொடர்ந்து வந்து லவ் பண்ணுவதாகக் கூறி டார்ச்சர் செய்திருக்கிறார். இதனால், எங்களது மகளை அவரது பாட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டோம். சில நாட்களாக எங்களது மகளை காணாததால் நதீம், ஃபர்மான் உள்ளிட்ட சிலர் எங்களது வீட்டுக்கு வந்து எங்களது மகள் எங்கே என்று கேட்டு மிரட்டி இருக்கிறார்கள். எனது மூத்த மகன் தெரிவிக்க மறுத்து விட்டதால், அவனை நதீம் உள்ளிட்டோர் தாக்கி இருக்கிறார்கள். மேலும், ஆத்திரம் அடங்காமல் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்த எனது இளைய மகனை தூக்கிச் சென்று கொன்று விட்டார்கள்” என்று கதறி அழுதிருக்கிறார்கள். இந்த செய்தியும் எந்த மீடியாக்களிலும் வரவில்லை.
லவ் ஜிகாத்தால் இன்னும் என்னென்ன கொடுமைகள் எல்லாம் அரங்கேறப் போகிறதோ?!