காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன் கரூர் எம்.பி ஜோதிமணிக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜோதிமணி. இவர், சமீபத்தில் டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நான் தமிழகத்தை சேர்ந்தவள், ராமர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் தமிழகத்தில் யாரை கேட்டாலும் ராமர் கோவிலை பற்றி தெரியாது என்று தான் கூறுவார்கள் என நெறியாளரிடம் தெரிவித்து இருந்தார். இவரின், இந்த பொறுப்பற்ற பதிலை கேட்டு பலர் கடும் கண்டம் தெரிவித்து இருந்தனர். இதுதவிர, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் ஜோதிமணியின் கருத்தை விமர்சனம் செய்து இருந்தனர். ராமாயணத்தோடு தொடர்புடைய எவ்வளவோ ஆலயங்கள் தமிழகத்தில் உள்ளது. இது கூட தெரியாமல் இவர் எப்படி? எம்.பியாக இருக்கிறார் என ஆன்மீகவாதிகள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அமெரிக்கை நாராயணன் கரூர் எம்.பி ஜோதிமணிக்கு கடும் கண்டனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; என் நண்பர் ஜோதிமணி பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். ஜோதிமணியின் இனத்தை சேர்ந்த பல நண்பர்கள் தங்கள் மூதாதையர்களை மட்டுமல்லாமல் ராமரை வணங்குபவர்கள் என குறிப்பிட்டுள்ளார். ஜோதிமணிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கண்டனம் தெரிவித்து இருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.