புதிய தலைமுறை ஊழியர் முத்து கிருஷ்ணன் இறப்பிற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் என ம.தி.மு.க. தலைவர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். அவரின், இந்த கருத்து ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு என விடியாத ஆட்சியை ஸ்டாலின் தலைமையிலான விடியல் அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில், நடைபெற்று வரும் அவலங்களை பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால், தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸட் மற்றும் வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் இதுகுறித்து பேசாமால் வாய்மூடி மெளனியாக இருந்து வருகிறது.
தி.மு.க. குறித்து ஏதேனும் கருத்து தெரிவித்தால், தங்களது எதிர்காலத்திற்கு ஆப்பு வைத்து கொண்டது போல ஆகிவிடும் என அக்கட்சியினர் நினைக்கின்றனர் என்பதே பலரின் ஒருமித்த கருத்தாக இருந்து வருகிறது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருதுநகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோ இவ்வாறு பேசினார் ;
தி.மு.க-வுக்காக நான் 21 ஆண்டுகள் பாடுபட்டேன். ஆனால், விதியின் விளையாட்டால் நான் தி.மு.க.விலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. நான், வெளியேறவில்லை தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டேன் என கூறியிருந்தார். வைகோவின், இந்த கருத்து கூட்டணிக்குள் அணுகுண்டை வீசியதற்கு சமம் என கழக கண்மணிகள் ம.தி.மு.க. தலைவரை சாடி இருந்தனர்.
இப்பட்டபட்ட சூழலில், புதிய தலைமுறையின் ஊழியர் கிருஷ்ணனின் இறப்பிற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் என மீண்டும் ம.தி.மு.க. தலைவர் வைகோ பகீர் குற்றச்சாட்டினை முன்வைத்து இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் அவலத்தை கண்டிக்கும் ம.தி.மு.க. தலைவரை பார்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க முன்வர வேண்டும் என பலர் வைகோவை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.