Share it if you like it
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலை கழகத்தில் நடைபெற்ற தமிழ் இயக்கத்தின் 6 ஆம் ஆண்டு விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். அதில், வேறு மொழி சொல் கலக்காமல் தமிழ் மொழியை மட்டும் பேசுபவர்களை தேட வேண்டியுள்ளது. நகர்ப்புறத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழில் எழுதக்கூட தெரிவதில்லை என்று பேசியுள்ளார்.
இந்தாண்டு நடந்த பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசானது ஆட்சி நடத்தி வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து இவ்வாறு பேசியது திமுக அரசைத்தான் மறைமுகமாக தாக்குகிறாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Share it if you like it