தமிழகத்தின் மூன்று மாவட்டங்களை இணைக்கும் மத்திய அரசின் நான்குவழிச் சாலை திட்டத்திற்கு கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெள்ளக்கோயில் முதல் சங்ககிரி வரையிலான 70 கிமீ நான்குவழிச் சாலை ரூ.2000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார், நமது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி அவர்கள்.
மேலும், இச்சாலை சங்ககிரி, வெப்படை, ஈரோடு, மொடக்குறிச்சி, விளக்கேத்தி, முத்தூர் வழியாக திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளதாகவும், மூன்று மாதங்களில் அதற்கான டெண்டர் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சாலைப் போக்குவரத்தையும் உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி
அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.