தமிழக காவல்துறையை கீழ்த்தரமாக விமர்சனம் லெனின் வன்னியரசுக்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சட்டமேதை பாரத ரத்னா டாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களின் 66-வது நினைவு நாள் நேற்றைய தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பாரதப் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என பலர் அவரது திருஉருவபடத்தின் முன்பு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அந்தவகையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் மரியாதை செலுத்த சென்றுள்ளார்.
இதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை தலைவர் லெனின் வன்னியரசு மற்றும் அக்கட்சியை சேர்ந்த குண்டர்கள் அர்ஜீன் சம்பத்திற்கு தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் மத்தியில் தள்ளு முள்ளு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வேண்டுமென்றே வீண் பதற்றத்தை ஏற்படுத்த முயன்ற வி.சி.க.வினரை கைது செய்து அரசு பேருந்தில் காவல்துறையினர் ஏற்றினர்.
இதனால், உஷ்ணமான லெனின் வன்னியரசு காவலர்களை பார்த்து பொறுக்கி கும்பல், ரவுடி கும்பல் என்று ஆவேசமாக திட்டியுள்ளார். அரசு அதிகாரிகளை இழிவாக விமர்சனம் செய்த லெனின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.