தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வி.சி.க. விடுத்த கோரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாரதப் பிரதமர் மோடி பதவியேற்று எட்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டியல் சமூகத்திரை குறித்து வார்த்தை ஒன்றினை பயன்படுத்தி இருந்தார். அவரின், கருத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இதையடுத்து, அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டன.
அப்புகாரில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் பதிவு சாதி மத கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். வி.சி.க.வின், புகாரினை வழக்காக பதிவு செய்ய காவல்துறை மறுத்து விட்டது. இதனை தொடர்ந்து, அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் காசி என்பவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்ற நீதிபதி அல்லி, மனுவில் எந்தவித முகாந்திரம் இல்லை என கூறி, வி.சி.க. வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து,