இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக இஸ்ரேலுக்கு இந்தியா, கனடா, ஜெர்மனி,அமெரிக்கா என மற்ற நாடுகள் எல்லாம் ஆதரவு தெரிவித்து உதவி செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவும் மற்ற உலக நாடுகளும் இஸ்ரேலை ஆதரிக்கும் நிலையில், தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிதம்பரம் மக்களவை உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,பாலஸ்தீனத்தை அபகரித்து, அநீதியாக #இஸ்ரேல் உருவான போது, அதனுடன் தூதரக உறவு கொள்ளாமல், அதை ஒரு நாடாகவே ஏற்காமல் நிராகரித்த வரலாறு கொண்ட நாடு இந்தியா. அந்த மரபின் படி #IndiaStandsWithPalestine என்பதே சரி. இஸ்ரேல் பக்கம் நிற்கும் பாஜகவை நிராகரிப்போம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அனைத்து நாடுகளும் இஸ்ரேலுக்கு துணை நிற்க, விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகர் மட்டும் ஏன் தீவிரவாதத்திற்கு ஆதரவாக நிற்கிறார். அவரையும் நம்பி ஓட்டு போட்டு மக்களைவை உறுப்பினராக்கிய மக்களை என்னவென்று சொல்வது ? இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விசிகவை கழுவி ஊற்றுகின்றனர்.