நன்கொடை கேட்டு பேக்கரியில் தகராறில் ஈடுபட்ட சிறுத்தை கட்சியின் நிர்வாகிகளை கூண்டில் அடைத்த காவல்துறை.
.தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப. இக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்யும் அட்டூழியங்கள், அடாவடிகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விழுப்புர மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு சின்னவளவனூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். வி.சி.க.வின் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் பொறுப்பில் இருப்பவர். தனது கட்சி தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு கூட்டேரிப்பட்டு பகுதியில் இயங்கி கொண்டு இருந்த பெட்ரோல் பங்கில் நன்கொடை கேட்டு தகராறு செய்துள்ளார். இதற்கு, பணம் தரமறுத்த மேலாளர் ரவிசங்கர் என்பவரை வி.சி.க.வினர் தாக்கிய சம்பவம் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பெரும் பரப்பினை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், வி.சி.க நிர்வாகிகள் நிகழ்த்திய மற்றொரு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
திருவாரூர் மாவட்டம் குடைவாசல் அருகே உள்ள கடை தெருவில் ஜெயசந்திரன் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரின், கடைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நகர செயலாளர் பால்கிட்டு மற்றும் மஞ்சகுடி செந்தில் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களோடு வந்துள்ளனர். இதையடுத்து, தங்களுக்கு தேவையான இனிப்புகளை அவர்கள் வாங்கி கொண்டனர். அதன்பின், பணம் கொடுப்பதற்கு பதிலாக கட்சி வளர்ச்சிக்காக நன்கொடை வழங்குமாறு துண்டு பிரசுரம் ஒன்றினை வழங்கியுள்ளனர்.
இதற்கு, கடை ஊழியர் முதலாளி வந்த உடன் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். எனினும், வி.சி.க நிர்வாகிகள் அழுவாத குறையாக அடம் பிடித்துள்ளனர். இதையடுத்து, பரிதாபபட்ட கடை ஊழியர் 20 ரூபாயை கொடுத்தாக சொல்லப்படுகிறது. சொற்பமான தொகையை கொடுத்து கடை ஊழியர் தங்களை அவமதித்து விட்டதாக சிறுத்தைகள் சீறியுள்ளனர். மேலும், கடையில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளி விட்டு அட்டசாகம் செய்துள்ளனர். மாமூல் கேட்டு கலாட்டா செய்த சம்பவம் குடைவாசல் பகுதி வியாபாரிகள் மத்தியில் பரவியதை அடுத்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, பேக்கரியில் அட்டகாசம் செய்த சிறுத்தைகளை காவல்துறையினர் கைது செய்து தற்பொழுது கூண்டில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த செய்தியினை பாலிமர் செய்தியாக வெளியிட்டுள்ளது இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.