வி.சி.க. தலைவர் திருமாவளவன் கோவில் பற்றி தெரிவித்த கருத்திற்கு தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி தக்க பதிலடியை வழங்கியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளன். இவர், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டவர். குறிப்பாக, ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறையை கொச்சையாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர். இதனிடையே, பாசறை முரசு இதழின் ஆசிரியர் மு.பாலன் எழுதிய நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட திருமாவளவன் இவ்வாறு பேசினார் ; தமிழகத்தில் கோவில்கள் கட்டப்படுவதே ஒரு வியாபாரம்தான். தெரு முனையில் ஒரு கோவிலை கட்டினால் ‘பத்து ஆண்டுகளில்’ நீங்கள் பெரிய ஆளாகி விடலாம். கோவில் கட்டுவது என்பது கடவுள் நம்பிக்கையால் அல்ல. சிறந்த ‘பிசினஸ்’ என்று தெரிவித்து இருந்தார்.
திருமாவின் கருத்திற்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி கொடுத்த பதிலடி இதோ.
அப்படி செய்வது தவறு தான். ஆனால், அதை விட தற்போது யாரும் இல்லாத வீடுகளை ஆக்கிரமிப்பது, புறம்போக்கு நிலங்களை வளைத்து போடுவது, வயதானவர்களின் சொத்துக்களை கட்டப்பஞ்சாயத்து செய்து ஆட்டையை போடுவது போன்ற பல்வேறு குற்றங்கள் அரசியலாக உள்ளது. கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்புகள் செய்தால், பத்து ஆண்டுகள் என்ன?’பத்தே நிமிடங்களில்’ மிக பெரிய ஆளாகி விடலாம். கட்டப்பஞ்சாயத்து செய்வது சிறந்த அரசியல் அல்ல பகல் கொள்ளை என தரமான பதிலடியை வி.சி.க.விற்கு கொடுத்துள்ளார்.