அடடா… இதுவல்லவோ கடமை!

அடடா… இதுவல்லவோ கடமை!

Share it if you like it

வேலூரில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்து மக்கள் புல்லரித்துப் போயிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் 3 நாள் சுற்றுப் பயணமாக நேற்று மாலை புறப்பட்டுச் சென்றார். முதல்வர் வருகையை ஒட்டி, 3 மாவட்டங்களிலும் புதிதாக சாலை அமைக்கப்பட்டன. மேலும், தெருக்களை சுத்தப்படுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்தன. அந்த வகையில், வேலூர் மெயின் பஜார் அருகேயுள்ள காளிகாம்பாள் கோயில் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. அவசர கதியில் நடந்த இந்த சாலைப் பணியின்போது தெருவில் நிறுத்தியிருந்த டூவீலர்களைக்கூட அகற்றாமல், அவற்றுடன் சேர்த்து சிமென்ட் சாலை போடப்பட்டிருக்கிறது.

இதில், காளிகாம்பாள் கோயில் தெருவில் மளிகைக்கடை வைத்திருக்கும் சிவா என்பவரின் பைக்கும் சிக்கிக் கொண்டது. இவர் கடந்த 27-ம் தேதி கடை மூடிவிட்டு, பைக்கை கடையின் முன்பாக நிறுத்திவிட்டு வீ்டுக்குச் சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கடையை திறக்க வந்து பார்த்தபோது, பைக்குடன் சேர்த்து சிமென்ட் சாலை போடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் கான்கிரீட் இறுகி விட்டதால் பைக்கை எடுக்க முடியவில்லை. இதனால் 2 மணி நேரம் போராடி சிமென்ட் கலவையை உடைத்து பைக்கை எடுத்திருக்கிறார். இதேபோல, இன்னொருவரின் ஸ்கூட்டி வாகனமும் சிமென்ட் கலவையில் சிக்கிக் கொண்டது. இவரும் போராடி ஸ்கூட்டியை எடுத்திருக்கிறார்.


Share it if you like it