திராவிட சித்தாந்தம், தமிழ் சினிமாவை கையில் எடுத்த விளைவு தான், தமிழ்நாடு மதசார்பற்ற மாநிலமாக உள்ளது என்று பிரபல திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருந்தார். இந்த நிலையில், அவரது திரைப்படங்களில் உள்ள புரட்சிகர வசனங்களை தொகுத்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு அவரது குறும்பட வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த பிரபல திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். மேலும், வி.சி.க.வின் முக்கி புள்ளிகள் மற்றும் கழக முன்னோடிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பேசிய வெற்றிமாறன், திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்த விளைவு தான், தமிழ்நாடு இன்று வரை மதசார்பற்ற மாநிலமாக இருந்து வருகிறது. வெளியில் இருந்து வரும் பல சக்திகளின் அதிகாரத்தை இது தடுக்கும் பக்குவம் கொண்ட மாநிலமாக இருக்கிறது. சினிமாவை அரசியல் மையத்திற்குள் கொண்டு வருவது மிகவும் அவசியம். நடுவில் இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் இல்லாமல் இருந்தது. இப்போது, திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்துள்ளது.
மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். இந்த கலையை சரியாக கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில், வெகு விரைவில் நம்மிடமிருந்து பல அடையாளங்களை எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில், வள்ளுவருக்கு காவி உடை அணிவது ஆகட்டும். ராஜ ராஜ சோழன் ஒரு ஹிந்து அரசனாக காட்ட முயற்சி நடைபெறுகிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தாம் எடுத்த படங்களில் வைத்துள்ள புரட்சிகர வசனங்களை தொகுத்து அதனை காணொளியாக நெட்டிசன்கள் வெளியிட்டு இருக்கின்றனர். இதுதான், திராவிட சித்தாந்தம் தமிழ் மொழியையும், தமிழ் சினிமாவையும் வளர்த்த லட்சணமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.