அலட்சியத்தால் பலியாகும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு ?

அலட்சியத்தால் பலியாகும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு ?

Share it if you like it

மதுரையில் அறுந்து தொங்கிய மின்சார ஒயர் உரசி இருச்சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னால் சைக்கிளில் சென்ற 12 வயது மகன் கண் முன்னாலேயே இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாநகர் பகுதியில் நேற்று (மே.10) மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்தது. சில பகுதிகளில் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
மதுரை மாநகர் TVS நகர் துரைசாமி சாலை பகுதியில் வசித்து வந்த முருகேசன்(50) , மனைவி பாப்பாத்தி (44) தம்பதியினர் பலசரக்கு கடை நடத்தி வரும் நிலையில் கடையை அடைத்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டுள்ளனர். தனது மகன் முன்னே சைக்கிளில் சென்ற நிலையில் அவரை பின்தொடர்ந்து பெற்றோர் பைக்கில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் சென்ற பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்த காரணமாக மின்சார வயர் அறுந்து தொங்கியது படி இருந்துள்ளது. இதனை முன்னாள் சைக்கிளில் சென்ற மகன் மின்கம்பி அறுந்து தொடங்கிய பார்த்து அது குறித்து பெற்றோரிடம் கூறுவதற்காக கொஞ்சம் தூரம் சென்ற திரும்பி பார்த்த நொடியில் மின்கம்பியை கவனிக்காத பெற்றோர் பைக்கில் வந்தபோது கணவன் மனைவி இருவர் மீது மின்சார வயர் பட்டதில் மின்சாரம் தாக்கி இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைப் பார்த்த மகன் கூச்சலிட்ட நிலையில் அருகில் உள்ளவர்கள் சென்றபோது இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்த பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்

மதுரையில் பெய்த மழை காரணமாக மின்சார கம்பி் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி மகன் கண் முன்பாகவே பெற்றோர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன மழை பெய்வது வழக்கம்.அதை யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. அப்படி கனமழை பெய்யும்போது மின்சார கம்பிகள் வயர்களும் அறுந்துக்கொண்டு விழ வாய்ப்புள்ளது. மழை நின்ற பிறகு உடனடியாக உடனடியாக அறுந்து விழுந்த கம்பிகள் அல்லது வயர்கள் இருந்தால் அப்புறப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று பரிதாபமாக இரண்டு உயிர்கள் போயிருக்காது. மின்சாரத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்களின் உயிர் பறிபோவதா ? தன் கண் முன்னாலேயே அப்பாவையும் அம்மாவையும் பறிகொடுத்த அந்த சிறுவனுக்கு திமுக அரசு என்ன பதில் சொல்ல போகிறது ? அந்த மாணவனின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது ? அலட்சியமாக பணிசெய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *