விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ஆம் தேதி நடக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அறிவித்ததால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. சுயேச்சைகள் உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 3 கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து நேற்று தேர்தல் விதிமுறைகளை மீறி விக்கிரவாண்டி தொகுதி, ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுகவினர் ஓட்டுக்கு வேஷ்டி சேலை வழங்கியதாகவும் அதனை பாமகவினர் தடுத்து நிறுத்தி அவர்கள் கொடுக்க வைத்திருந்த வேஷ்டி சேலைகளை பிடுங்கி ரோட்டில் எறிந்துள்ளனர். இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்த நிலையில் திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் விக்ரவாண்டி தொகுதியில் உள்ள பெண்களை ஒரு வீட்டில் சந்தித்து அவர்களை மூளைசலவை செய்து திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வாங்கி தருகிறேன் என்றும் அது செய்கிறேன் இது செய்கிறேன் என்று வாக்குறுதிகளை எல்லாம் அள்ளிவிட்டுள்ளார். மேலும் நம்ம தொகுதியில் வன்னியர் தான் எல்எல்ஏ ஆகணும்.வேற யாரும் ஆக கூடாது. அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் வன்னியரை தேர்தலில் நிறுத்தியுள்ளார். இவ்வாறு திமுக எம்எல்ஏ சந்திரன் பேசும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அடுத்த வாரம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் திமுக இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வேஷ்டி சேலைகளை கொடுப்பது, பெண்களை சந்தித்து வாக்கு சேகரிப்பது என தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் இது பெரியார் மண் சாதி இல்லை என்று பகுத்தறிவாதிகள் என்று பீற்றிக்கொண்டு வாக்கு கேட்பது, சட்டமன்ற தேர்தலில் வன்னியர் தான் எம்எல்ஏ ஆக வேண்டும் என்று கூறுவது. விக்ரவாண்டி இடை தேர்தலில் ஜெயிக்க சாதியை கையில் எடுத்து அரசியல் செய்து வருகின்றனர் திமுகவினர்.