விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சாதனை படைத்தவர்களுக்கு டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய அறிவியல் விருதுகளை நேற்று வழங்கினார்.
தேசிய அறிவியல் விருதின் (ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது) விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா மற்றும் விஞ்ஞான் குழு ஆகிய நான்கு பிரிவுகளில் 33 விருதுகள் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அதில் அறிவியல் – தொழில்நுட்பத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் விஞ்ஞான் ரத்னா விருதானது, இந்தியாவில் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியின் முன்னோடியான தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு வழங்கப்பட்டது.
விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சந்திரயான்-3 குழுவிற்கு விக்யான் குழு விருதை சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல் பெற்றுக் கொண்டார். விருதுப்பெற்ற அனைவருக்கும் பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார். சந்திரயான்-3 பணியை வெற்றிகரமாக முடித்தது நாட்டின் மிகப்பெரிய அறிவியல் சாதனைகளில் ஒன்றாகும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்தார்.